Bangalore Shocker: மதுபான விடுதிக்கு சென்றுவந்த பெண் கடத்தி கற்பழிப்பு: தள்ளாடிய போதையில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!
அவனை கையில் எடுத்தோர் தங்களின் வாழ்நாளில் கட்டாயம் கவலைப்படவேண்டிய சூழல் ஏற்படும்.
டிசம்பர் 15, பெங்களூர் (Bangalore): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், மென் பொறியாளராக தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மதுப்பழக்கம் கொண்ட பெண்மணி, நேற்று முன்தினம் இரவில் பப்புக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளார்.
கண்காணித்த விஷமிகள்: அங்கு பெண்மணி தனிமையில் வந்திருப்பதை அறிந்துகொண்ட விஷமிகள், அவரை கண்காணித்து இருக்கின்றனர். பின் அதிக மதுபானத்தை பெண்மணி அருந்தியதும், அவரை காரில் ஏற்றிக்கொண்டு தங்களின் வீட்டிற்கு அழைத்துவந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. Cauliflower Benefits: காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!
போதையால் நேர்ந்த சோகம்: பெண் போதையில் இருந்ததால் அவருக்கு எதுவும் தெரியவில்லை. மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது விபரீதம் தெரியவந்துள்ளது. அவசர அவசரமாக கதவை திறந்து அக்கம் பக்கத்தினரிடம் பெண் உதவி கேட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை: அவர்கள் நிலைமையை புரிந்துகொண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கோரமங்களா காவல் துறையினர் பெண்ணை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். பெண்மணியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து, புகாரை பெற்ற அதிகாரிகள், அவரை பலாத்காரம் செய்த கும்பலை தேடி வருகின்றனர்.