Jagadish Shettar: நேற்று பாஜக, இன்று காங்கிரஸ்.. முன்னாள் முதல்வரின் கட்சி மாற்றம் குறித்து கர்நாடக காங்., தலைவர் கருத்து.!

இப்படிப்பட்ட நெருக்கடி காலங்களில் அரசியல் கட்சியினர் செய்யும் கட்சி தாவல்கள் தொடர்பான விஷயங்கள் கவனத்தை பெறும்.

Karnataka State Congress Chief D.K Shivakumar (Photo Credit: ANI)

 

ஏப்ரல் 17, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை (Karnataka Assembly Poll 2023) தேர்தல் ஒரேகட்டமாக 224 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில் அங்கு பாஜக (BJP) ஆட்சி நடந்து வரும் நிலையில், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசு கட்டுப்பாடுகள் தேர்தல் ஆணையத்திடம் (Election Commission) முழுவதுமாக இருக்கும்.

அம்மாநில அரசியல் நிலவரத்தை பொறுத்தமட்டில் கடந்த தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) JD (S) கூட்டணியில் இருந்த பாஜக, பின்னாளில் கூட்டணியில் இருந்து வெளியேறி தனது ஆட்சியை கொண்டு வந்தது.

தற்போது அம்மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், கட்சி தாவல்கள் என்பது பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில், கர்நாடக பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் (Jagadish Shettar) காங்கிரஸ் (Congress) கட்சியில் இணைந்துள்ளார். TN Govt Announce Relief Fund: துபாயில் 2 தமிழர்கள் தீ விபத்தில் உயிரிழந்த விவகாரம்; ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு முதல்வர்.!

இவர் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து சுயமாக இராஜினாமா செய்த நிலையில், இன்று அக்கட்சியில் இணைந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் (D.K ShivaKumar),

"ஜெகதீஷ் ஷெட்டர் எங்களிடம் எந்த கோரிக்கையும் வைத்து கட்சியில் இணையவில்லை. நாங்களும் பொறுப்புகள் வழங்குவதாக கூறவில்லை. அவர் எங்களது தலைமை மற்றும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்துள்ளார். நாங்கள் இந்தியாவின் ஒற்றுமையை பேணிக்காக்கிறோம்" என்று கூறியுள்ளார்.