IPL Auction 2025 Live

Coromandel Express: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் தடம்புரண்டு விபத்து; உயிரிழப்பு அபாயம், 50 பேர் படுகாயம் என தகவல்.!

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Coromandel Express Train Accident visuals (Photo Credit Twitter)

ஜூன் 02, புவனேஸ்வர் (Coromandel Express Accident): சென்னையில் இருந்து மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா வரை செல்லும் கோரமண்டல் அதிவிரைவு இரயில் சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களை இணைத்து பயணம் செய்கிறது.

இந்த இரயில் 1,659 கி.மீ தூரத்தை 25:30 மணிநேரம் பயணம் செய்து இலக்கை அடைகிறது. இன்று கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் அதிவிரைவு இரயில், புவனேஸ்வருக்கு 20 கி.மீ தொலைவில் விபத்திற்குள்ளானது. சரக்கு இரயில் மீது மோதி தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.

விபத்தில் அதிவிரைவு இரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்து வனப்பகுதியில் நடந்துள்ளாதால், மீட்பு படையினர் விரைந்து வந்து தொடர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 50 பேர் விபத்தில் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசர அழைப்புக்கு: பாலஷோர் கட்டுப்பாட்டு மையம் 06782 262286