Largest Rivers India: இந்தியாவில் இருக்கும் நீளமான ஆறுகள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.. தெரிஞ்சுக்கோங்க..!

இவற்றில் இந்திய அளவில் மாநிலங்களின் எல்லையை கடந்து செல்லும் ஆறுகள் ஏராளம்.

Template: Indian Map with River

டிசம்பர், 11: இந்தியாவை வளப்படுத்த பல முக்கிய உயிர்நாடி நதிகளும், அதன் கிளை ஆறுகளும் (Rivers & Sub River Lines) இருக்கின்றன. இவற்றில் இந்திய அளவில் மாநிலங்களின் எல்லையை கடந்து செல்லும் ஆறுகள் ஏராளம். அவை தான் கடந்து செல்லும் மாநிலத்தை விவசாயம் செய்ய வைத்து வலுப்படுத்தி வருகிறது. இன்று இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நதிகள் குறித்த தகவலை காணலாம்.

கங்கை (Ganga): இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நதிகளில் நீளமான முதல் நதி கங்கை. இது 2,525 கி.மீ பயணம் செய்கிறது. இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை உத்திரகான்ட் மாநிலத்தில் கங்கோத்ரியாக தோன்றி கங்கையாக வளம்சேர்கிறது. கங்கையில் 140 க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வாழுகின்றன. கங்கை தனது வழியில் உள்ள உத்தரகாண்ட், உத்திர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் வழியே பங்களாதேஷ் நாட்டிற்குள் பயணம் செய்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை தனது வழிப்பயணத்தில் யமுனா, சன், கோமதி, கங்காரா, கந்தாக், கோஷி ஆகிய கிளை நதிகளாகவும் பிரிகிறது.

Ganga River Map

கோதாவரி (Gotawari): இந்தியாவை வளம்சேர்க்கும் ஆறுகளில் இரண்டாவது பெரியது என்ற இடத்தை பெற்றுள்ளது கோதாவரி ஆறு. இது 1,465 கி.மீ தூரம் பயணம் செய்கிறது. தென்னிந்தியாவின் கங்கை என்றும் கோதாவரிக்கு மற்றொரு அடைமொழியும் உண்டு. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள த்ரியம்பகேஸ்வர் பகுதியில் தோன்றும் கோதாவரி சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் வழியே வங்காள விரிகுடாவை சென்றடைகிறது. இது பூர்ணா, பிரன்ஹிதா, இந்திராதி, சபரி என துணை ஆறுகளாகவும் அந்தந்த மாநிலங்களை வலுப்படுத்துகிறது.

கிருஷ்ணா (Krishna): இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆறுகளில் 3-வது இடத்தை பெற்றுள்ளது கிருஷ்ணா நதி. மகாராஷ்டிரா மாநிலத்தில் உருவாகி கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வழியே 1,400 கிமீ பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணா நதி பீமா, பஞ்சகங்கா, தூதகங்கா, கைதபிரபா, துங்கபத்ரா ஆகிய கிளை நதிகளாகவும் பாய்கிறது. Upcoming Mobiles: அடுத்தடுத்து வெளியாகவுள்ள அட்டகாசமான மொபைல் போன்கள் லிஸ்ட் இதோ.. உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுங்க மக்களே.! 

யமுனா (Yamuna): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாஷி மாவட்டத்தில் உருவாகும் யமுனோத்ரி ஆறு, யமுனையாக உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம் மாநிலங்களில் 1,376 கி.மீ பாய்ந்து செல்கிறது. இது நேரடியாக கடலில் கலப்பது இல்லை. மலைப்பகுதியில் தொடங்கி சமவெளி நிலப்பரப்பில் முடிவடைகிறது.இது ஹிந்டன், சாரதா, கிரி, ரிஷிகங்கா, ஹனுமான் கங்கா, சசூர், சாம்பல், பெட்வா, கென், சிந்த், டன் ஆகிய கிளை நதிகளாகவும் பாய்கிறது.

Yamuna River Map

நர்மதா (Narmadha): நெற்புடா என்று முந்தய காலங்களில் அழைக்கப்பட்டு பின்னாட்களில் நர்மதா நதியாக உருவானது ரேவா ஆறு ஆகும். இது மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் உயிர்நாடி என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கை நோக்கி நாட்டில் உள்ள ஆறெல்லாம் ஓட, மேற்கை நோக்கி பாயும் இந்திய ஆறுகளில் நர்மதாவே முதலானது ஆகும். நர்மதா நதி ராமாயணம் மற்றும் மகாபாரத இதிகாசங்களை தொடர்புபடுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைப்போல, இந்தியாவில் உள்ள லடாக்கில் தொடங்கி இந்திய நிலப்பரப்பில் 1,400 கி.மீ பயணம் செய்து மீதமுள்ள பகுதிகளை பாகிஸ்தான் வழியே கடந்து பயணிக்கிறது இந்துஸ் ஆறு. இது இப்பட்டியலில் 6ம் இடத்தையும், திபெத்தில் உருவாகி அருணாச்சல பிரதேசம், அசாம் வழியே இந்தியாவுக்குள் புகுந்து வங்கதேசம் வழியாக வங்கக்கடலில் சேரும் பிரம்மபுத்திரா ஆறு 7ம் இடத்தை பெற்றுள்ளது. இது இந்தியாவிற்குள் 916 கி.மீ தூரம் பயணிக்கிறது. இதன் மொத்த தூரம் 2,900 கிமீ ஆகும். இதில் மகாநதி 890 கி.மீ தூரமும், காவேரி 800 கி.மீ தூரமும், டாப்தி ஆறு 724 கி.மீ தூரமும் பயணம் செய்கிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 02:09 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).