LIC Policy: எல்.ஐ.சி திட்டத்தில் பாலிசி எடுக்க விரும்புகிறீர்களா?.. இந்த செய்தி உங்களுக்கு தான்.. அசத்தல் டிப்ஸ்.. தெரிஞ்சுக்கோங்க.!

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தனியார் நிறுவனத்தின் நிதி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் அதிரடி திட்டங்களை வழங்குகிறது.

LIC

டிசம்பர், 11: இன்சூரன்ஸ் என்று கூறினாலே பலருக்கும் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி மட்டும் தான் (LIC Insurance). பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தனியார் நிறுவனத்தின் நிதி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் அதிரடி திட்டங்களை வழங்குகிறது. எல்.ஐ.சி-யில் நமக்கு தேவையான பல திட்டங்கள் இருக்கின்றன. அவை குறித்து இன்று நாம் காணலாம்.

ஜீவன் அமர் திட்டம் (Jeevan Amar Plan): 40 ஆண்டுகள் வரையில் காப்பீடு பெரும் திட்டங்களில் முக்கியமானது ஜீவன் அமர் திட்டம். இந்த பாலிசி காலம் நிறைவு பெரும் வரையிலும் பணம் செலுத்திக்கொள்ளலாம். 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஜீவன் அமர் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர் இறந்துவிடும் பட்சத்தில், அவர் செலுத்திய தொகையை மொத்தமாக அல்லது 5 - 10 - 15 ஆண்டுகளுக்கு என தவணையாக பிரித்தும் பெற்றுக்கொள்ளலாம். 20 வயது உள்ளவர்கள் திட்டத்தில் இணைந்தால் 60 ஆண்டுகள் வரையிலும் காப்பீடு பெறலாம்.

ஜீவன் லாப் திட்டம் (Jeevan Labh Policy): எல்.ஐ.சியில் அதிக போனஸ் கிடைக்கும் திட்டங்களில் சிறப்பானது ஜீவன் லாப் திட்டம். இந்த திட்டத்தில் முதிர்வு ஆண்டு வரையிலும் பிரீமியம் செலுத்த தேவையில்லை. கல்வி, திருமணம், விபத்து காப்பீடு போன்ற வசதிகளும் ஜீவன் லாப் திட்டத்தில் உள்ளது. இந்த திட்டத்தில் இணைத்தவர்களுக்கு 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

குறைந்தது 8 வயது உள்ளவர்கள் முதல் 59 வயது உள்ளவர்கள் வரை இத்திட்டத்தில் இணைந்து பலன் பெறலாம். இதன் குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூ.2 இலட்சம் ஆகும். அதிகபட்சமாக வரம்பு ஏதும் கிடையாது. இதில், 16 ஆண்டுகள் திட்டத்திற்கு 10 ஆண்டுகள் பிரீமியமும், 21 ஆண்டுகள் திட்டத்திற்கு 15 ஆண்டுகள் பிரீமியமும், 25 ஆண்டுகள் திட்டத்திற்கு 16 ஆண்டுகள் பிரீமியமும் செலுத்த வேண்டும். GST Precentage: ஜி.எஸ்.டி என்றால் என்ன?.. எந்தெந்த பொருளுக்கு எவ்வுளவு ஜி.எஸ்.டி பிடித்தம் தெரியமா?..! 

ஜீவன் லக்சய திட்டம் (Jeevan Lakshya Policy): எல்.ஐ.சியில் ஜீவன் லக்சய திட்டம் என்பது 3 ஆண்டுகள் வரையில் பணம் செலுத்தவேண்டிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்படி பாலிசிதாரர் இறந்தால் இறப்பு பலனாக 10% சேமிப்பு முதிர்வு காலம் வரையிலும் கிடைக்கும்.

ஜீவன் சாந்தி திட்டம் (Jeevan Shanti Policy): எல்.இ.சியில் ஜீவன் சாந்தி திட்டம் என்பது ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலமாக வாழ்நாட்கள் முழுவதிலும் ஓய்வூதியம் பெறலாம். பயனருக்கும், அவரின் துணைக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். இது நிரந்தர வருவாய் தரும் திட்டங்களில் முக்கியமானதாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,50,000 பணம் செலுத்தலாம். அதிகபட்சமாக நிர்ணயம் கிடையாது.

இந்த திட்டத்தை தொடங்கிய 1 ஆண்டுகள் கழிந்த பின்னர் கடன் பெறலாம். வருமான வரி சட்டத்தின் 80C & 80D படிவத்தின் கீழ் வரிசலுகையும் உண்டு.

ஜீவன் உமங் (Jeevan Umang Policy): எல்.ஐ.சியில் ஜீவன் உமங் திட்டம் என்பது ஓய்வூதிய திட்ட ஆகும். இந்த திட்டத்தின் கீழ் முதிர்வு தொகையும் கிடைக்கும். பயனாளருக்கு சலுகை, ஓய்வூதிய காலத்தில் பென்ஷன் போன்றவையும் வழங்கப்படும்.

பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana): எல்.ஐ.சியில் பிரதான மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிகளுக்கு 10 ஆண்டுகள் வரையிலும் ஆண்டுக்கு ஒருமுறை ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தின் பயனர்கள் கட்டாயம் 60 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு பின்னர் கடன் வாங்கலாம். இந்த திட்டத்தின்படி பயனர்கள் இணைந்துவிட்டு வெளியேற நினைத்தால் 2 % அபராதம் விதிக்கப்படும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 03:41 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).