IPL Auction 2025 Live

Mother Marriage: கணவரை இழந்த 45 வயது தாய்க்கு திருமணம் செய்துவைத்து அழகுபார்த்த பாசக்கார மகன்.. மகிழ்ச்சியில் புதுமண ஜோடி.!

பின்னர் இப்பழக்கம் ஒழிக்கப்பட்டாலும், கணவரை இழந்து வாழும் பெண்கள் வாழ்க்கை துணையின்றி வாழுவதையே விரும்புகின்றனர். சிலர் மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

Marriage | File Picture (Photo Credit: Pixabay)

ஜனவரி 23 , கோலாப்பூர்: மஹாராஷ்ட்ரா (Maharashtra) மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் (Kolhapur) வசித்து வரும் யுவராஜ் செலேவின் (வயது 23) தந்தை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்து இருக்கிறார்.

அவரது மறைவுக்கு பின்னர் தாய் ரத்னம் சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட, அதனைக்கண்டு வேதனையடைந்த யுவராஜ் தாயை ஒருவரும் சுப நிகழ்ச்சிகளுக்கு கூட அழைப்பது இல்லையே என வெதும்பியுள்ளார். இதனையடுத்து, அவரை சமூகத்தில் அங்கீகரிக்க வாழ்க்கை (Life Partner) துணை தேவை என்பதை உணர்ந்தவர், தாயை சமாதானம் செய்து மாருதி கன்வத் என்பவருக்கு திருமணம் (Marriage) செய்துகொடுத்துள்ளார்.

தனது தாயாரின் மறுமணம் தொடர்பாக யுவராஜ் தெரிவிக்கையில், "எனது 18 வயதில் நான் தந்தையை இழந்தேன். அது மிகப்பெரிய அதிகாரி. அவரின் மறைவு என்னைவிட, எனது தாயாருக்கு தான் பேரிழப்பாக இருந்தது. சமூகத்தால் அவர் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் தவித்து வந்தார். 25 ஆண்டுகளாக தந்தையுடன் அவர் திருமண பந்தத்தில் இருந்தார். YouTuber Arrested: இரயில்வே ஸ்டேஷனில் இன்ஸ்டா ரீலுக்கு வீடியோ எடுத்த டெடி யூடியூபர் கைது.. இரயில்வே காவல்துறை அதிரடி.!

Kolapur Mother Marriage Visuals

ஆணொருவர் மனைவியை இழந்தால் மறுமணம் செய்து வைக்கும் சமூகம், பெண் கணவரை இழந்தால் அவரை ஒதுக்குகிறது. இதனால் தாயாருக்கு மறுமணம் செய்ய முடிவெடுத்தேன். முதலில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அவரிடம் பேசி புரியவைத்து சம்மதிக்கவைத்தேன். கோலாப்பூர் பாரம்பரியமிக்க ஊர் என்பதால், மணமகன் தேடுவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.

இதற்கிடையில் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மணமகனை தேடியபோது உமாருதி கன்வத் கிடைத்தார். அவரிடம் திருமணம் தொடர்பாக பேசினோம். அவரும் சம்மதித்தார். இன்று எனது தாயாருக்கு நான் அவரை திருமணம் செய்து வைத்தேன். இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்று கூறினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 23, 2023 01:22 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).