NCP Sharad Pawar: தலைவர் பதவியில் இருந்து விலகிய சரத் பவார்.. தொண்டர்கள் போர்க்கொடி, தலைமை அலுவலகத்தில் போராட்டம்.!

இனி அரசியலில் போட்டியிடப்போவது இல்லை. ஆனால், அரசியலில் தொடர்ந்ந்து பயணிப்பேன் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

NCP Supporters Protest | NCP Chief Sharad Pawar (Photo Credit: ANI / Facebook)

மே 02, மும்பை (Maharashtra News): மராட்டிய மாநிலத்தில் முக்கிய அரசியல் பெருந்தலைவராக இருப்பவர் அஜித் பவார். இவர் தனது அரசியல் பயணத்தை காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கி, முந்தைய காலங்களில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், வேளாண்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து இருக்கிறார்.

கடந்த 1999ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தேசியவாத காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி சிறப்புடன் செயல்பட்டு வந்தார். இவர் இன்று வரை அக்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து அக்கட்சிக்குள் பிரச்சனை நிலவி வருகிறது.

அஜித் பவார் கட்சியின் எம்.எல்.ஏக்கள் தன்வசம் இருக்கிறார்கள் என்று கூறி பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்தார். ஆளுநரிடம் அதற்கான சட்டபூர்வ கோரிக்கைகள் வைக்கப்பட்ட பின்னர், சரத் பவாரின் முயற்சியால் எம்.எல்.ஏக்கள் அவர்களின் பக்கமே இருந்தனர். சில நாட்கள் கழித்து மீண்டும் அஜித் பவார் - சரத் பவார் நேரில் சந்தித்துக்கொண்டனர். Bodi Crime: சிறுவனை இருசக்கர வாகனத்தோடு இழுத்து சென்ற போதை ஆசாமி; தங்குதடையின்றி விற்பனையாகும் கஞ்சா, மதுவால் அரங்கேறும் கொடூரங்கள்.!

இதற்கு பின்னர் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் முயற்சியால் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி நடந்து, இன்று அதுவும் பறிபோனது. பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

அவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர், கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் அஜித் பவார் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். சம்பவ இடத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.