Land Subsidence In Kashmir: சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மூழ்கிய நிலப்பகுதி; ஜம்முகாஷ்மீரில் அதிரவைக்கும் சம்பவம்.! மக்கள் பீதி.!
ஏப்ரல் 27, ராம்பன் (Kashmir News): ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ராம்பன் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெர்நோட் கிராமத்தில் திடீரென நிலப்பகுதி (Land Subsidence) மூழ்கியுள்ளது. இச்சம்பவம், நேற்று மாலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. Sam Curran Dismiss Phil Salt: ஒரேயொரு யாக்கர் பால்; சால்ட்டின் கனவை தெறிக்கவிட்ட சாம் கரண்; மெய் சிலிர்க்கவைக்கும் வீடியோ இதோ.!
இதனால், 30-க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலைகளில் விரிசல் ஏற்பட்டு, சுமார் 1,200 மீட்டர் தொலைவு வரை சாலைகள் பாதிப்படைந்தன. ஒரு சில இடங்களில் 12 மீட்டர்கள் வரை சாலைகள் மூழ்கியுள்ளது. இதில், விவசாய நிலங்களும் மூழ்கி பயிர்களும் சேதமடைந்துள்ளது. இந்த சூழலில் எந்தவிதமான மறுசீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை என்று சில பொறியியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கலாஷா தேவி கூறுகையில், இந்நிகழ்வு இரவு 7 மணி அளவில் சாலைகளில் லேசாக வெடிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இரவு 10 மணிக்குமேல் ஓரடி வரை சாலைகள் மூழ்கின. சுமார் 31 வீடுகள் சேதமடைந்துள்ளது என்று அவர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.