Young Girl Raped: 29 வயது இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம்; வீட்டை சுற்றிக்காட்டுவதாக அழைத்து சென்று பயங்கரம்.!
பக்கத்து வீட்டு இளைஞர் என நம்பி சென்றதற்கு கயவன் இழைத்த கொடுமையை பலநாள் தாங்கிய பெண், கணவனின் தயவால் குற்றவாளியை சிறைக்கு அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
ஜூன் 15, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் (Palghar), அசொல் பகுதியை சேர்ந்த 29 வயது பெண்மணிக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞர் ஆகாஷ் விட்டல் சங்கப்பல் (Akash VItthal Sankpal).
ஆகாஷ் விட்டல் தனது பக்கத்து வீட்டு பெண்ணான திருமணம் முடிந்த இளம்பெண்ணுடன் நட்பாக பேசுவது போல நடித்து, தனது வீட்டில் இருக்கும் விதவிதமான பொருட்களையெல்லாம் காண்பிக்கிறேன் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணை தனது இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளான்.
அங்கு வைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அதனை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு பலமுறை பெண்ணை நிர்பந்தித்து வீட்டிற்கு அழைத்து பலாத்காரம் செய்துள்ளான். கயவனின் கொடுமையால் பெண் மனத்துயருக்கு உள்ளாகி இருக்கிறார்.
ஒருகட்டத்தில் தனக்கு நடக்கும் பொறுமை தாளாது கலங்கிய பெண்மணி, கணவரிடம் நடந்ததை கூறி கதறி அழுதுஇருக்கிறார். இதனையடுத்து, தம்பதிகள் அங்குள்ள அசொல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் இளைஞர் ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.