Pondicherry Minor Girl Rape & Murder Case: புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமி கொலை விவகாரம்; குற்றவாளி சிறையில் தற்கொலை..!

ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய 9 வயது சிறுமி பலாத்காரம் & கொலை விவகாரத்தில், குற்றவாளியான 57 வயது நபர் சிறையில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

Accuse Vivekanandan | Death File Pic (Photo Credit: @ThanthiTV X / Pixabay)

செப்டம்பர் 16, பாண்டிச்சேரி (Pudhucherry News): புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியில் வசித்து வரும் 9 வயதுடைய சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தபோது மாயமாகினார். இந்த விஷயம் குறித்து முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, சிறுமி இளைஞர் ஒருவருடன் சென்றது தெரியவந்தது. இதனிடையே, சிறுமியின் சடலம் கால்வாயில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

உடல் கால்வாயில் வீச்சு:

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று உடல் வீசப்பட்டதாக புகார் எழுந்து போராட்ட குரல் எதிரொலிக்க, காவல்துறையினர் கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (வயது 57) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், வாயை பொத்தியபோது சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் உடலை கால்வாயில் வீசியதும் தெரியவந்த நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, 800 கிலோ தானியங்கள் கொண்ட சித்திரம்; அசத்திய சென்னை மாணவி..! 

தற்கொலை முயற்சி:

சிறையில் விசாரணையில் இருக்கும்போதே விவேகானந்தன் சோப்பை விழுங்குதல், நீண்ட நேரம் மூச்சை பிடித்து நிறுத்த முயற்சித்தால், சாட்டையால் முகத்தை அழுத்துதல், கழுத்தை இருக்குதல் என தற்கொலை முயற்சியும் மேற்கொண்டு வந்தார். இதனால் அவர் தீவிர கண்காணிப்பில் அடைத்து வைக்கப்பட்டார். இவ்வழக்கின் இறுதி விசாரணை விரைவில் நீதிமன்றத்திக்கு வருகிறது.

சிறை வளாகத்திலேயே தற்கொலை: 

இந்நிலையில், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், சிறையிலிருக்கும் கழிவறையில் தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சடலமாக அவரின் உடலை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.