செப்டம்பர் 16, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள கொளப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் செல்வம். இவரின் மனைவி சங்கீரனி. தம்பதிகளின் 13 வயது மகள் ப்ரெஸ்லி ஷேகினா (Presley Shekinah). இவர் சென்னையில் செயல்பட்டு வரும் வேலம்மாள் (Vellammal School) தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். நாளை (செப் 17) பிரதமர் நரேந்திர மோடியின் (PM Modi Birthday 2024) பிறந்தநாளை, அவரது கட்சித் தொண்டர்கள் வெகுவாக சிறப்பிக்க காத்திருக்கின்றனர். பல உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவியவுள்ளன. இதனிடைய, சிறுமியும் வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களுடன் சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். Heatwave Alert in Tamilnadu: சுட்டெரிக்கப்போகும் வெயிலால் அசௌகரியம்; மக்களே உஷார்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
12 மணிநேரம் தொடர் உழைப்புக்கு வெற்றி:
13 வயதுடைய சிறுமி ப்ரெஸ்லி, சுமார் 600 சதுர அடி நீளமுள்ள இடத்தில, 800 கிலோ அளவிலான தானியங்களை (World's Largest Millet Painting) பயன்படுத்தி, சுமார் 12 மணிநேரம் தொடர்ந்து செயலாற்றி பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தையொத்த சித்திரத்தை உருவாக்கி சாதனை படைத்தார். நேற்று காலை 08:30 மணியளவில் தனது முயற்சியை தொடங்கிய சிறுமி, இரவு 08:30 மணிக்கு அதனை நிறைவு செய்து, உலகின் மிகப்பெரிய தினை ஓவியம் வரைந்து சாதனை செய்தார். இந்த சாதனை அவரது குடும்பத்தினர், பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் சித்திரத்தை தானியத்தில் உருவாக்கிய பள்ளி மாணவி:
#WATCH | Chennai, Tamil Nadu | A 13-years-old school student, Presley Shekinah creates a portrait of PM Narendra Modi using grains and lentils in a 12-hour-long effort, ahead of the PM's 74th birthday on September 17. (15/09) pic.twitter.com/ubQE4hxq5D
— ANI (@ANI) September 16, 2024