1.5-Year-Old Girl Crushed To Death: ஒன்றரை வயது சிறுமிக்கு இப்படியா மரணம் வரணும்?.. உடல் நசுங்கி பலியான சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், ஒன்றரை வயது சிறுமி ஒருவர் எஸ்யூவி வாகனம் மோதியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl Crushed To Death (Photo Credit: @DriveSmart_IN X)

ஆகஸ்ட் 13, ஆக்ரா (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்தீப். இவர் தனது மனைவி, 10 வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகளுடன் காஸ்மோஸ் மாலில் ஷாப்பிங் (Shopping Mall) சென்றிருந்துள்ளார். ஷாப்பிங் முடிந்து மாலில் உள்ள பார்க்கிங்கில் ஜெய்தீப்பும் அவரது மனையும் தாங்கள் வாங்கிய பொருட்கள் நிறைந்த தள்ளுவண்டியுடன் உள்ளனர். அப்போது இருக்குழந்தைகளும் தனியே உள்ளனர்.

இந்த நிலையில் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்த வந்த சாரதி என்பவர், குழந்தை இருப்பதை கவனிக்காததால் நொடிப் பொழுதில் குழந்தை மீது கார் ஏறி இறங்கியது (Girl Crushed To Death). குழந்தையின் பெற்றோர்கள் குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அலறினார். இச்சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் தகவலறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாரதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Couple Dies By Suicide: கடன் தொல்லையால் நகை வியாபாரி மனைவியுடன் தற்கொலை.. வாட்ஸ்அப்பில் அனுப்பிய உருக்கமான மெசேஜ்..!

குறிப்பு: கார் பார்க்கிங் பகுதியில் (Parking Areas) விபத்துக்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்லும். குழந்தைகள் விளையாடும் போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் மோத வாய்ப்புள்ளது. குழந்தைகளை ஒருபோதும் பார்க்கிங் பகுதியில் தனியே விட்டுச் செல்ல வேண்டாம். குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.