Kolkata Building Collapse: கொல்கத்தாவில் திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. 2 பேர் பலி.. 7 பேரின் நிலை என்ன?..! மீட்புப்பணிகள் தீவிரம்.!
தெற்கு கொல்கத்தாவில் உள்ள மெட்யாப்ரூஸில், 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மார்ச் 18, கொல்கத்தா (Kolkata News): தெற்கு கொல்கத்தாவில் உள்ள மெட்யாப்ரூஸில் (Metiabruz) நேற்று இரவு 12.10 மணியளவில் ஐந்து மாடி, கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி அருகில் உள்ள குடிசையில் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் மீட்கப்பட்டனர் மற்றும் மேலும் இன்னும் 7 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைச்சர் சுஜித் போஸ் தெரிவித்தார். WPL 2024 Final: "கப் தானடா வேணும்.. இந்தாங்கடா.." முதன் முறையாக இறுதிப்போட்டியில் வென்ற ஆர்சிபி..!
இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (West Bengal Chief Minister Mamata Banerjee), தெற்கு கொல்கத்தாவின் மெட்டியாப்ரூஸ் பகுதியில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் வருத்தம் அடைவதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருவதாகவும், கட்டிடம் கட்டுவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை மாநில நிர்வாகம் வழங்கவில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.