School Staff Beats Student: மாணவரை சரமாரியாக தாக்கி, சுவரில் மோத வைத்து கொடுமை: வகுப்பறையில் ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் காட்சிகள்.!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவரை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 02, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவரை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் செப்டம்பர் 24 அன்று காலை 8.00 மணியளவில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் ஆசிரியர் மாணவனின் இடத்திற்கு சென்று, மாணவனின் தலைமுடியைப் பிடித்து இழுத்தவாறே வகுப்பின் முன் வரை இழுத்து அடிக்கிறார். இந்த சம்பவம் வைரலானதை அடுத்து, அகமதாபாத் மாவட்ட கல்வி அதிகாரி (DEO) இந்த தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். Customs Officials Seize 26 iPhone: ட்ரெண்டாகும் ஐபோன் கடத்தல்.. 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் விமான நிலையத்தில் பறிமுதல்..!
லட்சக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில், குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் ஒழுக்கமானவர்களாக வளர்வார்கள் எனும் கருத்து ஆழமாக நிலவி வருகிறது. இதற்குக் காரணம், அடிப்படையிலேயே நாம் எல்லோரும் அடிமை சமூகத்தில் இருந்து வந்தவர்கள். ஒழுக்கத்தை தண்டனை மூலமாக உடனடியாக குழந்தைகள் மீது திணித்துவிடலாம். ஆனால் குழந்தைகளை ஒழுங்குபடுத்த, நிறைய பொறுமையும் நேரமும் தேவை. ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட இந்த சமூகமும், நம் அடுத்த தலைமுறையினருக்காக அந்த நேரத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
மாணவரை சரமாரியாக தாக்கி, சுவரில் மோத வைத்து கொடுமை: