Mohanlal Visits Wayanad Landslide Spot in Army Uniform: வயநாடு நிலச்சரிவு; ராணுவ சீருடையில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்ட நடிகர் மோகன்லால்..!

கேரளாவில் வயநாட்டில் நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை நேரில் சென்று நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்.

Actor Mohanlal Visited Wayanad Landslide (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 03, வயநாடு (Kerala News): கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் (Wayanad Landslide) சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலரது உடல்களை மீட்கும் பணிகள் (Rescue Operations) தொடர்ந்து 5-வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, 82  நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு, மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகின்றது. 82-Year-Old Woman Dies: வீட்டில் உறங்கிய 82 வயது மூதாட்டியை கடித்துகுதறிய நாய்கள்; துள்ளத்துடிக்க பரிதாப பலி..!

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், காவல் படையினர், மீட்புக்குழுவினருடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். தெர்மல் ஸ்கேனர் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கட்டான சூழலில் மீட்புப் படையினருடன் தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், ராணுவத்தில் கெளரவ பதவியில் உள்ள நடிகர் மோகன்லால் (Actor Mohanlal), வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப் பணிகளை அவரது ராணுவ சீருடையில் சென்று பார்வையிட்டார். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதியான புஞ்சிரிமட்டம் கிராமத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, ராணுவ அதிகாரிகளிடம் விசாரித்தார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now