செப்டம்பர் 01, சென்னை (Chennai News): கேரள மாநிலத்தில் மூளையை தின்னும் அமீபாவால் (Brain Eating Amoeba) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, வயநாடு, கொல்லம், மலப்புரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்த அமீபா ஏரி, குளம், குட்டை, ஆறு மற்றும் நீச்சல் குளம் போன்ற நீர் நிலைகளில் காணப்படும். Health Warning: மூளையை உண்ணும் அமீபா .. உயிரைப்பறிக்கும் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
இதன் அறிகுறிகள்:
மூக்கு வழியாகவே உடலுக்குள் சென்று, நேரடியாக மூளையை அடையும். நரம்பு வழியாக பயணித்து, மூளையை சென்றடைந்து திசுக்களை உணவாக தின்று பாதிப்பை உண்டாக்கும். அசுத்தமான தண்ணீர் மூக்கு வழியாக சென்ற 5 முதல் 6 நாட்களில் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது. இதன் பாதிப்பால் மூளையில் கடுமையான வீக்கம், மூளை காய்ச்சல் ஏற்படும். பின் கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி, உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு, இறுதியாக மரணத்தை ஏற்படுத்துகிறது.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு:
கேரளாவில் அமீபாவால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், கேரள அரசு மிக தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 31) கோழிக்கோடு மாவட்டம், ஓமசேரியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கின் 3 மாதக் குழந்தை உட்பட 2 பேர் அமீபா பாதிப்பால் உயிரிழந்தனர். கேரளாவில் இதுவரை, 42 பேர் பாதிப்படைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக அரசு நடவடிக்கை:
கேரளாவில் பரவும் அமீபா பாதிப்பால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அசுத்தமான நீர்நிலைகள், நீச்சல் குளங்கள் மற்றும் பொதுவான நீர் தேக்கங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களை சுத்தமாக பரமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.