Vijayawada Rains: ஆந்திராவை புரட்டியெடுத்த கனமழை; வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்..!

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

Amaravati Rains (Photo Credit: @Bnglrweatherman X)

செப்டம்பர் 02, விஜயவாடா (Andhra Pradesh News): தென்மேற்கு பருவமழையானது இந்தியாவில் தீவிரமடைந்து பல மாநிலங்களில் நல்ல மழையானது பெய்து வந்தது. நேற்று முன்தினம் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி ஆந்திராவின் கலிங்கபட்டினம் பகுதியில் கரையை கடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆந்திராவில் உள்ள விஜயவாடா, அமராவதி, தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை நகரின் பல்வேறு இடங்களை வெள்ளக்காடாக்கியது.

தேசிய மீட்புப்படை ஆந்திரா சென்றது:

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மொத்தமாக ஆந்திராவில் உள்ள 294 கிராமங்களில் இருக்கும் 13000 க்கும் அதிகமான மக்கள் தாழ்வான இடங்களில் இருந்த நிலையில், அவர்கள் பத்திரமாக வெளியற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளை துரித கதியில் மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட 2 தேசிய மீட்புப்படை குழுவினரும் விரைந்துள்ளனர். 5-Year-Old Girl Raped: 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்; தலைநகரில் பகீர் சம்பவம்.! 

பிரதமர், உள்துறை அமைச்சர் பேச்சு:

கனமழை, வெள்ளத்தைத் தொடர்ந்து ஆந்திரப்பிரதேசம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து, தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார். அதேபோல, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருமாநில முதல்வர்களை தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.

இரயில்கள் ரத்து:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தாழ்வான இடங்களில் புகுந்துள்ள வெள்ள நீர் காரணமாக, அவ்வழியாக செல்லும் சென்னை - டெல்லி ஜிடி இரயில் உட்பட 18 முக்கிய அதிவிரைவு இரயில்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனங்கள், செப்டம்பர் மாதம் 09ம் தேதி வரை, தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொண்டுள்ளது.

தெலுங்கானா கேசமுத்திரம் பகுதியில் தண்டவாளங்கள் சேதத்திற்குள்ளான காட்சிகள்:

மழை வெள்ளத்தால் அமராவதி பாதிக்கப்பட்டதன் கழுகு காட்சிகள்: