Bus Driver Dragged For 1km: 1 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட ஓட்டுநர்; துடிதுடிக்க நடந்த மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
ஆந்திர மாநிலம் சித்தூரில் மற்றொரு பேருந்து ஓட்டுநருடன் மோதியதில், பேருந்து ஓட்டுநர் ஒருவர் மீது பஸ் ஏறி 1 கிமீ ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டு முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 25, சித்தூர் (Andhra Pradesh News): ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூரில் உள்ள மகாசமுத்திரம் டோல்கேட் அருகே, மார்னிங் ஸ்டார் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் மூலம் இயக்கப்படும் இரண்டு பேருந்துகளும் அதிகாலை 1:30 மணியளவில் வந்தடைந்தன. அப்போது ஒரு பஸ்சின் கண்ணாடி மற்றொன்றில் மோதியதால், ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் நீடித்து, சண்டையானது.
பின்னர் மார்னிங் ஸ்டார் டிராவல்ஸ் பேருந்தின் ஓட்டுநர் ராஜு தனது வாகனத்தை விட்டு இறங்கி ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் பேருந்து முன் நின்றார். தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் பேருந்தின் ஓட்டுநர் சீனிவாச ராவ், தனது பேருந்தை முன்னோக்கி ஓட்டினார். இதில் ராஜு பஸ்சின் அடியில் சிக்கி சுமார் 1 கிமீ ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டு முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Mining Operators Case: கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி..!
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பாங்குராபாளையம் காவல் துறையினர் ராவை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டூர் மாவட்டம், செப்ரோலு மண்டலத்தில் உள்ள பத்தரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜூ, மார்னிங் ஸ்டார் டிராவல்ஸில் பணிபுரிந்து, சமீபத்தில் பொன்னூரில் குடியேறினார். இவருக்கு அருணா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.