Central Govt Notifies CAA Rules: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மார்ச் 11, புதுடெல்லி (New Delhi): பாஜக தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019-ல் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) (CAA) கொண்டுவரப்பட்டது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், ஜெயினர்கள் மற்றும் பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.