GST Council: பாப்கார்ன் பிரியர்களுக்கு ஷாக் செய்தி: 18% வரி? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதம்.!
இது பாப்கார்ன் பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
டிசம்பர் 21, ஜைசால்மர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜைசால்மர் நகரில், 55 வது ஜிஎஸ்டி (55th GST Counsil Meeting 2024) கவுன்சில் கூட்டமானது நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாநில நிதித்துத்துறை அமைச்சர்கள், செயலர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில், அந்தந்த மாநிலங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. Bipin Rawat: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
ஜிஎஸ்டி கூட்டத்தில் (GST Council) ஆலோசனை:
55 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய அங்கமாக ஏஏசி தொகுதிகள், செறிவூட்டப்பட்ட அரிசி, சுவை ஏற்றப்பட்ட பாப்கார்ன் ஆகியவைக்கும் வரிவிதிப்பு தொடர்பாக விவாதிக்கப்ட்டுள்ளன. 50% க்கும் அதிகமான ஆட்டோகிளேவ், காற்றோட்டமான கான்கிரீட் தொகுதி ஜிஎஸ்டி 18% ல் இருந்து 12% ஆக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்கள், பழைய கார்களின் விற்பனை விகிதம் 12% முதல் 18% வரை உயர்த்தப்படலாம். Woman Gang Rape: நம்பி வந்த பெண்ணை சீரழித்த படுபாவிகள்.. 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!
பாப்கார்னுக்கு (Popcorn) ஜிஎஸ்டி:
இன்றளவில் திரையரங்கு உட்பட பல மக்கள் கூடும் இடங்களில் பிரதான விற்பனையில் இடம்பெறும் பாப்கார்னில் (Popcorn GST Slabs) மசாலா, உப்பு சேர்க்கப்பட்ட ரகத்திற்கு 12% ஜிஎஸ்டி வரியும், கேரமல் எனப்படும் இனிப்பு வகை பாப்கார்ன் ரகத்திற்கு 18% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசயத்திற்கு கடும் எதிர்ப்பு தொடக்க நிலையில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மறுஆய்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு திரையரங்குகளில் பாப்கார்னுக்கு அதிக விலை வைத்து விற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதில் ஜிஎஸ்டி வரி பாப்கார்னுக்கு அமல்படுத்தப்பட்டால், இன்னும் விலை உயரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.