டிசம்பர் 20, டெல்லி (Delhi News): முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் (Bipin Rawat), கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் (Helicopter Crash) சிக்கி உயிரிழந்தார். தற்போது, உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு கோவையில் இருந்து உதகைக்கு ஹெலிகாப்டரில் மனைவி மதுாலிகா உள்ளிட்ட 11 பேருடன் பிபின் ராவத் சென்றபோது, குன்னூர் அருகே மலை மீது மோதி விபத்தில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தனர். Woman Gang Rape: நம்பி வந்த பெண்ணை சீரழித்த படுபாவிகள்.. 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!
மனித தவறே காரணம்:
இந்நிலையில், விமானப்படை விபத்துகள் தொடர்பாக விசாரிக்கும் பாதுகாப்புத் துறை நிலைக்குழு, 2017 முதல் 2022 வரையிலான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 5 ஆண்டுகளில் விமானப்படை தொடர்புடைய 34 விபத்துகள் நிகழ்ந்ததாகவும், குறிப்பாக பிபின் ராவத் உயிரிழந்தது ஹெலிகாப்டரை இயக்கிய விமானியின் தவறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.