Sexual Harassment (Photo Credit: Pixabay)

டிசம்பர் 20, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை (Indore) சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவருடன் விவாகரத்து ஆனது. இதனையடுத்து, அவர் தனது பெற்றோரின் வீட்டில் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். Dead Body In Parcel: எலக்ட்ரானிக்ஸ் பார்சலில் வந்த சடலம்; ஆவலுடன் எதிர்பார்த்து நடுநடுங்கிய பெண்மணி.. திகிலூட்டும் சம்பவம்.!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை:

கடந்த 2020ஆம் ஆண்டில், அவர் தனது வாட்ஸ்அப் மூலம் ஒரு நபருடன் அறிமுகமாகி நட்புடன் பழகி வந்துள்ளார். பின்னர், ஒரு நாளில் தன்னை சந்திக்க விரும்புவதாக கூறி அவர் அழைத்துள்ளார். மறுநாள், அந்த இளம்பெண் சென்றபோது, ​​அந்த நபர் மேலும் 4 பேருடன் இருந்தார். அவர்கள் பெண்ணை காருக்குள் இழுத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்தனர்.

கடுங்காவல் சிறை தண்டனை:

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சம்மந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கும்பல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 5 பேருக்கும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை (Imprisonment) விதித்து நீதிமன்ற சிறப்பு நீதிபதி எட்டாவது கூடுதல் அமர்வு நீதிபதி அனிதா சிங் உத்தரவிட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094.

ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3