Ex-President Pratibha Patil Hospitalised: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 14, புனே (Pune): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் (Former President Pratibha Patil), இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக 2007 முதல் 2012 வரை பதவி வகித்தவர் ஆவார். இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில், நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Biden vs Trump Again For US President: அமெரிக்க அதிபர் தேர்தல்.. 70 ஆண்டுக்கு பின் நடக்கும் மறுபோட்டி.. பைடன், டிரம்ப் மோதல் உறுதி..!
இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உடல் நலம் குறித்துப் பாரதி மருத்துவமனை (Pune Bharti Hospital) வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், பிரதிபா பாட்டீல் உடல் நலம் சீராக உள்ளது என்றும், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.