Dick Cheney (Photo Credit: @femijr X)

நவம்பர் 04, வாஷிங்டன் (World News): அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் டிக் செனி (Dick Cheney) தனது 84 வயதில் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நிமோனியா, இதய மற்றும் வாஸ்குலர் நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர் உயிரிழந்தார். அவர் 2001 முதல் 2009 வரை ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் அமெரிக்காவின் 46வது துணைத் தலைவராகப் பணியாற்றினார். 2003ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு உந்து சக்தியாக இருந்தார். Avalanche on Nepal Mountain: பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி.. 4 பேர் மாயம்..!

டிக் செனி மறைவு:

அமெரிக்க வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த துணை ஜனாதிபதிகளில் ஒருவராக திகழ்ந்தார். ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் ஏற்படும் ஆபத்து குறித்து மிகவும் வெளிப்படையாக எச்சரித்த புஷ் நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக டிக் செனி விளங்கினார். நெப்ராஸ்காவில் பிறந்த இவர், வயோமிங்கில் சேனி ஜெரல்ட் ஃபோர்ட் அரசில் வெள்ளை மாளிகை பணியாளராக தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.