PM Modi Rides in Putin’s Car After SCO Summit (Photo Credit : @narendramodi X)

செப்டம்பர் 01, சீனா (World News): ஜப்பானுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 30 சீனாவுக்கு சென்றடைந்தார். சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமருக்கு சீனாவில் உள்ள இந்திய வம்சாவளிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு சீன அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு தரப்பட்டது. அதனை தொடர்ந்து சீனாவின் ஷாங்காய் மாகாணம், தியான்ஸன் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பின் (Xi Jinping) மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாட்டுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விரைவில் இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான பயணம் (India - China Direct flights) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. PM Modi China Visit: இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை.. சீனா சென்ற பிரதமர் மோடி முடிவு.! 

ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது குறித்த வீடியோ :

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு :

முன்னதாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இந்தியர்கள் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சீன நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது இந்த நிலை மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த நான்கு தசாப்தங்களாக பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா பாதிக்கப்பட்டு தற்போது பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று திரள வேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மையை பிற நாடுகள் மதிக்க வேண்டும். இறையாண்மையை தாண்டி செயல்படும் பட்சத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு பாதிக்கப்படும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு, நம்பிக்கை, மறு கட்டமைப்பு, சீரமைப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். அமைதியாக வந்தால் இந்தியாவின் கதவுகள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு திறந்தே இருக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நிதி ஆதாரங்களை கண்டறிந்து அழிப்பதில் இந்தியா தற்போது முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது" என பேசினார்.

சீனா, இந்தியா, ரஷ்யா நாட்டு தலைவர்கள் மகிழ்ச்சியுடன் உரை :

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு :

இந்த நிகழ்வுக்கு முன்னதாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மகிழ்ச்சியான உரையாடலையும் நடத்தி இருந்தனர். இது தொடர்பான காணொளிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக அமெரிக்கா இந்தியாவின் மீது 50% வரி விதித்து உத்தரவிட்டது. ரஷ்யாவுடன் நட்பு உறவை பாராட்டி தொடர்ந்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கி வணிகம் செய்வதால் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு கவனத்தைப் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்திய பிரதமராக பணியாற்றும்போது ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த நிலையில், புதினுக்கு பிடித்தமான நபராகவும் கவனிக்கப்படுகிறார். இதனால் இருதரப்பு நல்லுறவு மேம்பட்டுவரும் நிலையில், அமெரிக்காவின் ஏதேச்சதிகார போக்கு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விரைவில் விவாதிக்க உள்ளனர். இதனால் உலகமே இருவரின் சந்திப்பை உற்றுநோக்கி இருக்கிறது. மேலும் மாநாடு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ரஷ்யா, இந்தியா நாட்டு தலைவர்கள் ஒரே காரில் தங்களது பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி ரஷ்ய அதிபரின் காரில் இருந்தபடி எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இது அமெரிக்காவின் வரிக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்திய உறுதியாக இருப்பதை சூசகமாக உறுதி செய்துள்ளது.

ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் கார் பயணம் :