16-Year-Old Gamer Jumps To Death: தீராத ஆன்லைன் கேம் மோகம்.. 14வது மாடியில் இருந்து கீழே குதித்த சிறுவன்.. துடிக்கும் பெற்றோர்கள்..!
புனே அருகே உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்த, ஆன்லைன் கேமால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுவன் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 31, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியைச் சேர்ந்தவர் சிறுவன் ஆர்யா ஸ்ரீராவ். 16 வயது சிறுவனான ஆர்யா ஸ்ரீராவ் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அன்று, 14ஆவது மாடியில் இருந்து குதித்து ஆர்யா ஸ்ரீராவ் தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஆர்யாவின் அறைக்குள் சென்று காவல்துறையினர் சோதனை செய்தபோது, அங்கு ஒரு ஓவியம் வரையப்பட்ட நோட் கண்டெடுக்கப்பட்டது. அதில், ஆர்யா வசித்த வீட்டின் வரைபடமும், பால்கனியில் இருந்து குதிக்கவேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர், ப்ளு வேல் என்ற உயிர்க்கொல்லி வீடியோ கேமை ஆர்யா விளையாடியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கின்றனர். Teenager Argument With Hotel Management: கெட்டுப்போன பார்சல் உணவு; ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்ட வாலிபர்.. வீடியோ வைரல்..!
குறிப்பு: பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் கேம் விளையாட்டை விளையாடும் குழந்தைகளின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டால், உடனே அதற்கு கவனம் கொடுக்கவேண்டும். பணம் செலவிட்டு விளையாடும் விளையாட்டுகள் தொடர்பாக பெற்றோர்கள் யோசித்து முடிவு செய்யவேண்டும். கேம் விளையாடும் போது பண மோசடி ஏற்பட்டால் அல்லது விளையாடுபவரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டால், புகார் அளிக்கவேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான புகார் அளிக்க 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.