Psycho Youth Killed 8 Family Members: திருமணமான 8 நாளில் மனைவி, அம்மா, அண்ணன் என குடும்பத்தினர் 8 பேரை கோடரியால் வெட்டிக்கொன்ற சைக்கோ இளைஞன்; ம.பி-யில் அதிர்ச்சி.!

அம்மா, அண்ணன், குழந்தைகள், மனைவி என 8 பேரை கொலை செய்த கொடூர இளைஞன், இறுதியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் ம.பி மாநிலத்தை அதிரவைத்துள்ளது.

Chhindwara Murder Case (Photo Credit: @chauthakhamba X)

மே 29, சிந்த்வாரா (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா (Chhindwara Murder Case) மாவட்டம், தாமியா தாலுகா, கச்சர் கிராமம் பழங்குடியின கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் தினேஷ் @ புரா கோந்த். இவர் தனது தாய் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால், மொத்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 08 ஆகும். கடந்த மே 21ம் தேதி தினேஷுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

உதவிக்கு வந்த அக்கம்-பக்கத்தினர்: இளைஞர் தினேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், நேற்று நள்ளிரவில் பயங்கர சம்பவம் ஒன்று இவர்களின் வீட்டில் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொடூரமாக கொலை செய்த (Chhindwara Youth Killed Family Members) தினேஷ், தானும் இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில், படுகாயத்துடன் உயிர்தப்பிய சிறுவன், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து இருக்கிறான். Rules From June 01, 2024: ஜூன் மாதத்தில் அமலாகவுள்ள புதிய விதிகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே.! 

8 பேர் கொடூரமாக கொலை: இதன்பின் அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அச்சமயம் குடும்பத்தினர் அனைவரும் கோடாரியால் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். பின் இவர்களின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தினேஷ் எதற்காக குடும்பத்தினரை கொலை செய்தார் என்ற விபரம் தெரியவில்லை. உள்ளூர் மக்கள் இளைஞரை மனநலம் பாதித்தவர் என கூறுகின்றனர். இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்: இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 10 வயது சிறுவன் சிந்த்வாரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தினேஷ் கோடரி கொண்டு நடத்திய கொடூர தாக்குதலில் அவரின் தாயார் சியா பாய் (வயது 55), சகோதரர் ஷ்ரவன் (வயது 35), அண்ணன் மனைவி பரதோ பாய் (வயது 30), சகோதரி பார்வதி (வயது 16), அண்ணனின் குழந்தைகள் கிருஷ்ணா (வயது 5), செவ்வந்தி (வயது 4), தீபா (1), மனைவி வர்ஷா (வயது 23) ஆகியோர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் 8 பேரையும் கொடூரமாக கொலை செய்த தினேஷ், அக்கம் பக்கத்தினர் விரட்டி வந்ததும் 100 மீட்டர் தொலைவுக்கு ஓடிச்சென்று, அங்கிருந்த மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.