மே 29, சென்னை (Chennai): 2024ம் ஆண்டு தொடங்கி கண்களை மூடித்திருப்பதற்குள் 5 மாதங்கள் முடியும் தருவாய் வந்துவிட்டது. இன்னும் ஒரேநாளில் 2024ம் ஆண்டில், அரையாண்டை உலகமே கடக்கவுள்ளது. காலமும், நேரமும் நிற்காமல் சுழன்றுகொண்டு இருக்க, அதன் வேகத்திற்கேற்ப நாமும் ஈடு கொடுத்து வாழ்ந்து வருகிறோம். அந்த வகையில், பிறக்கவும் ஜூன் மாதம் 01ம் தேதி முதல் மக்கள் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சில விதி மாற்றங்கள் மற்றும் பிற விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், ஜூன் 01ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு, வங்கிகள் விடுமுறை நாட்கள், ஆதார் கார்ட் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் அமலாகவுள்ள மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ள சிறப்பு செய்தித் தொகுப்பை எமது லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது. அவற்றை பின்வருமாறு தெரிந்துகொள்ளுங்கள்.
ஓட்டுநர் உரிமத்துக்கான விதிமுறைகள்: இந்தியக் குடிமக்கள் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெரும் புதிய விதிகளை இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 01ம் தேதி முதல் தனிப்பர்கள் அரசு ஆர்.டி.ஒக்களுக்கு பதில், தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் சோதனையை எடுக்கலாம். இம்மையங்களை சோதனை செய்யவும், உரிமத்தை பெறும் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்படும்.
வாகனங்கள் அகற்றம் மற்றும் அபராத தொகைகள் உயர்வு: மத்திய அரசு அமல்படுத்திய புதிய விதிகளின் வாயிலாக 9 இலட்சத்திற்கும் அதிகமான அரசு வாகனங்களை படிப்படியாக அகற்ற, மாசுக்கட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிவேகத்தில் வாகனத்தை இயக்கினால் விதிக்கப்படும் அபராதத்தை வரம்பு ரூ.2000, சிறார் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், வாகன உரிமையாளரின் வாகன பதிவு அட்டை ரத்து, சிறார் 25 வயது வரை உரிமம் பெற தகுதியில்லாதவர் என்ற விஷயத்தை அமல்படுத்துவது ஆகியவையும் அடங்கும். ICC T20 IND Vs PAK Match Weather Prediction: ஐசிசி டி20 போட்டியில் மோதிக்கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான்; வானிலை நிலவரம் எப்படி?.. விபரம் உள்ளே.!
ஆதார் அட்டை புதுப்பித்தல்: மத்திய அரசால் இந்திய அடையாள ஆவணங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஆதார் கார்ட் புதுப்பிப்பு நடைமுறைகள் இணையவழியில் எளிய முறையில் பதிவு செய்யப்படும். அதன் வாயிலாக, ஆதார் அட்டையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு புதுப்பித்தலுக்கும் ரூ.50 கட்டணமாக வசூல் செய்யப்படும். ஜூன் 14ம் தேதிக்குள் ஆதார் கார்டை புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளாக கருதப்படும் 01ம் தேதி எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை செய்யும் நிறுவனங்களால் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், வணிக சிலிண்டரின் விலை என்பது ஏற்ற-இறக்கமாக இருந்து வரும் நிலையில், ஜூன் மாதம் 01ம் தேதி முதல் வணிக சிலிண்டருக்கான விலை மேலும் குறையலாம் என கணக்கிடப்படுகிறது. அதேபோல, பெட்ரோல்-டீசல் விலையிலும் மாற்றங்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் விடுமுறை: இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி, அதன் விடுமுறை நாட்களில் ஜூன் மாதம் மட்டும் 10 நாட்கள் இருக்கின்றன. இதில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி-ஞாயிறும் அடங்கும். ஜூன் மாதத்தில் ராஜா சங்கராந்தி, ஈத் உல் அதா உட்பட விடுமுறை நாட்கள் இருப்பதால், வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கிசார்ந்த பணப்பரிவர்தனைக்கு காத்திருப்போர் தேதிகளை கவனித்துக்கொள்வது நல்லது.