Car Plunged into Lake: காலையிலேயே போதை? அதிவேகம்.. கார் ஏரியில் பாய்ந்து 5 இளைஞர்கள் பலி.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
பிற ஐவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
டிசம்பர் 07, யாதாத்ரி (Telangana News): தெலுங்கானா (Telangana) மாநிலத்தில் உள்ள யாதத்ரி புவனகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஜலல்பூர் கிராமத்தில் யாதகிரிகுட்டா என்ற ஏரி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில், 6 பேர் கொண்ட இளைஞர்கள் குழு, காரில் பயணம் செய்தது. இவர்கள் கொத்தக்குடேம் பகுதியில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி பயணம் செய்தனர். இந்த இளைஞர்கள் குழு அங்குள்ள எல்பி நகர், ஆர்டிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
நீரில் மூழ்கி உயிரிழப்பு:
அதிகாலை நேரத்தில் அதிக வேகத்தில் பயணம் செய்த இளைஞர்களின் வாகனம், மேற்கூறிய யாதகிரிகுட்டா ஏரியில் பாய்ந்து மூலங்கியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த ஆறு பேரில், ஐவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே வந்தார். பின் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். Tiruppur Shocker: ஸ்னாக்ஸ் கடை பழக்கம்.. கொடூர கணவனிடம் இருந்து தப்பிக்கவைத்து, சிறையில் தள்ளிய கள்ளக்காதல்... திருப்பூரில் அதிர்ச்சி.!
அதிவேகம்:
நிகழ்விடத்திற்கு வந்த பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், காரை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். பின் அதிகாரிகளால் கார் மீட்கப்பட்டு, விபத்தில் பலியானோரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிவேகமாக சென்றபோது கார் தறிகெட்டு இயங்கி விபத்தில் சிக்கி இருக்கிறது.
போதையில் விபத்து?
இந்த விபத்தில் மணிகண்டா யாதவ் (வயது 21) என்பவர் மட்டும் காயத்துடன் உயிர்தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்படி விபரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். காலையிலேயே இவர்கள் போதையில் இருந்ததாகவும், அதனால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. கார் விபத்தில் சிக்கி 5 இளைஞர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய கார், ஏரியில் இருந்து மீட்கப்படும் காணொளி:
விபத்து தொடர்பாக காவல் அதிகாரி பகிர்ந்துகொண்ட தகவல்: