Avinashi Ramesh Murder Case Accuse Arrested by Cops (Photo Credit: @Sriramrpckanna 1 X)

டிசம்பர் 06, அவிநாசி (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (Avinashi), தாமரை கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரின் மனைவி விஜயலட்சுமி. தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஆகும். இவர்கள் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் வசித்து வருகிறார்கள். இங்கு கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் கொடூர கொலை:

கடந்த டிசம்பர் 01 அன்று, அதிகாலை நேரத்தில் ரமேஷ் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது, கோவை - சேலம் ஆறு வழிச்சாலையில், திடீரென வந்த ஐந்து மர்ம நபர்கள் ரமேஷை சரமாரியாக அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்கள் கொண்டு வெட்டிச் சாய்த்தனர். பின் ஐவர் கும்பல் காரில் தப்பிச் சென்றது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கூலிப்படை கைது:

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிரிழந்த ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் பதிவான சிசிடிவி கேமிரா காட்சிகளின்பேரில் கோபாலகிருஷ்ணன், அஜித், சிம்போஸி, சரண், ஜெயப்ரகாஷ் ஆகிய ஐவர் முதலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். Pallavaram: குடிநீரில் கழிவுநீர் கலந்து மூவர் பலியானதாக கூறப்படும் விவகாரம்; அரசுத்தரப்பு விளக்கம் சொல்வது என்ன?.. விபரம் உள்ளே.! 

கள்ளக்காதலன் கைது:

விசாரணையில், இவர்கள் அனைவரும் ரமேஷை கொலை செய்த கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது அம்பலமானது. இவர்களிடம் ரமேஷை கொலை செய்ய ரூ.8 இலட்சம் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சையத் இர்பான் என்பவர் ரமேஷை கொலை செய்ய பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

கணவனின் கொடுமையால் மலர்ந்த கள்ளக்காதல்:

சையத்திடம் விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் காரணமும் அம்பலமானது. ரமேஷின் மனைவி விஜயலட்சுமி, சையத் இர்பான் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். ரமேஷ் எப்போதும் வீட்டில் கடுமையாக நடந்துகொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும், விஜயலட்சுமியை மனைவி என பாராது துன்புறுத்தி வந்துள்ளார்.

கொலை செய்ய திட்டம்:

அந்த சமயத்தில், வீட்டிற்கு அருகே இருந்த தின்பண்ட கடையில் பொருட்கள் வங்கச் சென்றபோது, இர்பான் - விஜயலட்சுமி இடையே பழக்கம் உண்டானது. பின்னாளில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இர்பான் வார்த்தையை வீச, அங்கு கள்ளக்காதல் மலர்ந்து இருக்கிறது. இதனையடுத்து, எப்போதும் வீட்டில் தன்னை துன்புறுத்தும் கணவரை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டி இருக்கின்றனர்Family Murder: குடும்பத்தைக் கொன்று நாடகமாடிய மகன்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

8 பேர் கைது:

இதனையடுத்து, விஜயலட்சுமி, இர்பானின் உதவியுடன் கூலிப்படையை அமைக்க திட்டம் தீட்டி இருக்கிறார். இவர்களுக்கு அரவிந்த் என்ற நபர் வாயிலாக கூலிப்படை அறிமுகம் கிடைக்க, கொலைக்காக ரூ.8 இலட்சம் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக வழக்கில் மொத்தமாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு அன்புள்ள கணவர், குழந்தையை கொலை செய்த குன்றத்தூர் அபிராமி இன்று சிறையில் இருக்கிறார். அன்புள்ள கணவர் இருந்தும், அங்கு பிரியாணி கடையில் ஏற்பட்ட பழக்கத்தால் கள்ளக்காதல் கொலை நடந்தது. இதனிடையே, திருப்பூரில் தினமும் தன்னை துன்புறுத்தும் எண்ணம் கொண்ட கணவரிடம் இருந்து விடுபட நினைத்த மனைவி, கள்ளக்காதல் வாயிலாக கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.