IT Employee Commits Suicide: மேனேஜரின் மிரட்டல்.. தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்..!
புனேயில் மேனேஜரின் மிரட்டலால் ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 23, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயிலுள்ள பிம்பிள் குரவ் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி அமித் காம்ப்ளே (வயது 42). இவரது சகோதரர் தான் விஷால் பிரமோத் சால்வி (வயது 36). விஷால் சால்வி, கடந்த 10 ஆண்டுகளாக ஏர்வாடாவின் வர்த்தக மண்டல பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் மேலாளர் ஜீஷன் மற்ற தொழிலாளர்கள் முன்னிலையில் விஷாலை அவமானப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவரை பணியில் இருந்து நீக்கி உள்ளார். இதனால் மனமுடைந்த விஷால் கடந்த ஜூலை 21ஆம் தேதி ஆற்றில் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். TN Weather Update: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தனது வாழ்க்கையை முடிக்கும் முன், விஷால் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மேனேஜர் ஜீஷன் ஹைதரின் புகைப்படத்தை வெளியிட்டு, தனது தற்கொலைக்கு மேனேஜரே காரணம் என்று ஸ்டேட்ஸில் குறிப்பிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) கீழ் இளைஞரை தற்கொலைக்குத் தூண்டியதாக நிறுவன மேலாளர் மீது காட்கி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல, தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.