Jammu Kashmir: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து.. உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!
உமர் அப்துல்லா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அக்டோபர் 18, ஸ்ரீநகர் (Jammu and Kashmir News): ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில், மாநிலங்களவை தேர்தல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 2014 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 65.52 சதவீதத்தை விட சற்று குறைவாகவே இருந்தது. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது.
இந்தியா கூட்டணி வெற்றி: இதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் ஆம் ஆத்மி என்சிபி கட்சி வென்றன. இதையடுத்து, சட்டப் பேரவையில் தேசிய மாநாட்டுக் கட்சிக் குழு தலைவராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். Rail Ticket Reservation New Rule: ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு.. இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!
முதல் அமைச்சரவை கூட்டம்: ஸ்ரீநகரில் உள்ள சேர்-இ-காஷ்மீர் இன்டர்நேஷனல் கான்வென்டின் சென்டர் (SKICC) இல் அக்டோபர் 16 அன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லாவுக்கு (Omar Abdullah) ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் உமர் அப்துல்லா தலைமையில் நேற்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான, மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் வரைவை, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் உமர் அப்துல்லா டெல்லி சென்று வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.