Red Alert For 8 Districts In Kerala: கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஜூலை 31, கொச்சி (Kerala News): கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழைக் கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நேற்று விடியற்காலையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் (Wayanad Landslides) ஏற்பட்டன. மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜூலை 31 காலை 7 மணிநிலவரப்படி நிலச்சரிவில் சிக்கி 126 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 89 பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் காரணமாக மீட்புப் பணிகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன. Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 126 பேர் பலி., 89 பேர் மாயம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ரெட் அலர்ட்: இந்நிலையில் கேரளாவில் இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் (Red Alert) எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படுவதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறும், நீர்நிலைகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேரள கடற்கரையோரங்களில் உயரமான அலைகள் எழ வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.