ஜூலை 31, வயநாடு (Kerala News): தென்மேற்குப்பருவமழை இந்தியாவில் உச்சம்பெற்றுள்ள நிலையில், பல மாநிலங்களில் கனமழை பெரும் சேதத்தினை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு (Wayanad) மாவட்டம், சூரல்மலையில் உள்ள முண்டகை, மேப்பாடி, அட்டமலை உட்பட 4 கிராமங்களில் நேற்று அதிகாலை நேரத்தில் திடீர் காற்றாற்று வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 4 கிராமங்கள் முற்றிலும் சிதைந்துபோன நிலையில், பாறைகள் உருண்டு வீடுகளின் மீது விழுந்தது. காற்றாற்று வெள்ளமும் அங்கு இருந்த வீடுகளை அடித்துச்சென்றது. கேரளாவில் (Kerala Rains) தொடர்ந்து கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு தொடர் மழை பெய்து வருகிறது.
மீட்பு பணியில் அதிகாரிகள்:
கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழை காரணமாக வயநாடு (Wayanad Landslides) மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்கு வீடுகளில் குடியிருந்த பலரும் மண்ணோடு புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்த மாநில அரசு உடனடியாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு பணியாளர்களை களத்தில் இறக்கியது. அவர்கள் அளித்த தகவலின்பேரில் உடனடியாக முப்படைகளின் உதவியாகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், களத்தில் 200 க்கும் அதிகமான தரைப்படை, விமானப்படை, கடற்படை அதிகாரிகள் மீட்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Young Woman Dies By Suicide: கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு; இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!
126 பேர் பலியானது உறுதி:
மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜூலை 31 காலை 7 மணிநிலவரப்படி நிலச்சரிவில் சிக்கி 126 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 89 பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக நிலச்சரிவை சந்திக்கும் மாநிலமாக இருந்து வரும் கேரளாவில், வயநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இழப்பு பேரிழப்பு என மாநில அரசு அறிவித்துள்ளது. கனமழை காரணமாக இரயில் பாதைகளிலும் தண்ணீர் தேங்கி, மண்சரிவு ஏற்பட்டு இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டோரின் உடல்கள் அங்கிருந்து அடித்துச்செல்லப்பட்டு, மல்லபுரம் சாலியாற்றில் 16 சடலங்கள் ஒதுங்கியது. குழந்தை, முதியவர்களின் சடலம் பல கி.மீ தூரம் கடந்து அடித்து வரப்பட்டது. 5500 மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவுக்கு குவியும் உதவிகள்:
இந்த பேரிழப்புக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பிற மாநில முதல்வர்கள், அத்தொகுதியின் மக்களவை எம்.பி ராகுல் காந்தி, என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சார்பில் கேரளால் மாநில அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவியும் வழங்கப்படுகிது, மருத்துவ குழுவினர் மற்றும் மீட்பு உதவி படையினரும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில், தேவையான அனைத்து உதவியையும் செய்ய முப்படைகளுக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு இருக்கிறார். Indian Students Killed In Canada: கனடாவில் நடந்த பயங்கர கார் விபத்து.. 3 இந்திய மாணவர்கள் பலி..!
உடல்களை அடையாளம் காணும் பணிகள் தொடக்கம்:
வயநாட்டில் மட்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு 48 மணிநேரத்தில் 550 மில்லிமீட்டரை கடந்து மழை பெய்ததால் விளைவே நிலச்சரிவு பெரிய காரணமாக அமைந்துள்ளது. அதேபோல, அங்குள்ள தேயிலைத்தோட்டங்களை நம்பி அடித்தட்டு மக்களும் பணியாற்றி வந்த நிலையில், அவர்களின் நிலைமையும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சுற்றுலாவுக்கு பெயர்போன வயநாட்டில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்தோரின் நிலைமையும் தெரியவில்லை. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்கள் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமூக ஆர்வலர்களின் குற்றசாட்டு:
சர்ச்சைக்குரிய நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட வேண்டாம் என ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டதாகவும், அங்கு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என எச்சரிக்கப்பட்டபோதிலும் அதனை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாததன் விளைவே நிலச்சரிவு மரணங்கள் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அங்குள்ள தேயிலைத்தோட்டத்தில் தமிழர்களும் தங்கியிருந்து பணியாற்றி வரும் நிலையில், நிலச்சரிவால் தமிழர்கள் யாரேனும் பாதிக்கப்ட்டனரா? என்ற விபரமும் சேகரிக்கப்படுகிறது. Gang Rape of a Software Engineer: நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இன்ஜினியர்.. நட்பு தினத்தன்று ஹைதராபாத்தில் நடந்த கொடூரம்..!
காரணம் என்ன?
பொதுவாக மலைப்பகுதிகளில் மண்ணின் தன்மை என்பது சற்று தளர்வாகவே இருக்கும். மழைக்காலங்களில் அவை வலுவிழந்து காணப்படும். தொடர் மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு, நான்கு நாட்களை கடந்து தொடரும் மழையால் மண்ணில் ஏற்படும் மாற்றம் போன்றவை அதனை தொடர்ந்து வலுவிழக்க செய்யும். இதனால் மண் நீரின் போக்கில் மெல்ல கரைந்து ஓடத்தொடங்கி, நீரின் வேகத்திற்கு ஏற்ப மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி நிலச்சரிவை ஏற்படுத்துகின்றன. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் தேவையான பாதுகாப்பை ஏற்படுத்தி அமைத்தாலும், அது இயற்கைக்கு முன் வெறும் துரும்பு மட்டுமே. பாதுகாப்பான கட்டிடங்களுக்கே இந்நிலை என்றால், சாதாரணமாக அல்லது தற்காலிகமாக, அலட்சியமாக அமைக்கப்படும் கட்டிடங்களின் நிலை கவலைக்கிடம் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.