Noel Tata: டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர்.. யார் இந்த நோயல் டாடா?!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் காலமான நிலையில், ரத்தன் டாடா அறக்கட்டளையின் தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அக்டோபர் 11, மும்பை (Maharashtra News): பிரபல தொழிலதிபரும் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான 86 வயதான ரத்தன் டாடா (Ratan Tata), காலமானதை அடுத்து வர்த்தக உலகம் தொடங்கி சாமானியர்கள் வரை அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். டாடா ஸ்டீல்ஸ், டாடா பவர், டாடா மோட்ட்டர்ஸ், டாடா கெமிக்கல் என ஏகப்பட்ட நிறுவனங்கள் டாடா குழுமத்தில் இருக்க, ரத்தன் டாடா 'உலக பணக்கார பட்டியலில்' இடம்பெறாததற்கு முக்கிய காரணம் அவரது 'சமூக உணர்வு'. சாமானியர்கள் வரை அவருக்காக இன்று வருந்துவதும் அதற்காகத்தான்.
ரத்தன் டாடா: வணிக உலகில் வெற்றி மற்றும் நேர்மைக்கு ஏற்ற பெயர் பெற்றவர்களில் முக்கியமானவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடா பம்பையில் 1937 டிசம்பர் 28 ஆம் தேதியன்று பிறந்தார். மும்பையை தளமாகக் கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக 1991-2012 மற்றும் 2016-17 பதவி வகித்தார். டிசம்பர் 2012 இல் டாடா குழுமத்தின் தலைவராக டாடா ஓய்வு பெற்றார். அவருக்கு பின்பு டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்ற சைரஸ் மிஸ்திரி பல பிரச்சனைகளுக்கு பின்பு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 2016 முதல் இடைக்காலத் தலைவராக சிறிதுகாலம் பணியாற்றினார். டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டபோது ரத்தன் டாடா ஜனவரி 2017 இல் ஓய்வு பெற்றார். இருப்பினும் டாடா அறக்கட்டளையின் தலைவராக அவரே தொடர்ந்து வந்தார். இந்நிலையில் அவரது மறைவைத் தொடர்ந்து இப்போது நோயல் டாடா புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். PM Modi Attends East Asia Summit: கிழக்கு ஆசிய உச்சி மாநாடு.. இந்தியா-ஆசியான் உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி.!
நோயல் டாடா (Noel Tata): நோயல் டாடா ரத்தன் டாடாவின் தம்பி ஆவார். இவருக்கு வயது 67. நோயல் டாடா பல ஆண்டுகளாக டாடா டிரஸ்ட்கள் உட்பட டாடா குழும நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். நோயல் டாடா முதன்முதலாக டாடா சர்வதேச நிறுவனத்தில் தான் தன் பணியை தொடங்கினார். பின் 1999-ம் ஆண்டில் டிரண்ட் (Trent) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். தற்போது, நோயல் டாடா, வாட்ச்மேக்கர் டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் துணைத் தலைவராகவும், டாடா குழுமத்தின் சில்லறை விற்பனை நிறுவனமான ட்ரெண்ட் மற்றும் அதன் NBFC நிறுவனமான டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பின் தலைவராகவும் உள்ளார். நோயல் வோல்டாஸ் குழுவிலும் பணியாற்றுகிறார். டாடா குழுமத்தில் இவருக்கு நல்ல பெயர் உண்டு.