Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகள் அமளியால் டிச.2 வரை ஒத்திவைப்பு.!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Parliament (Photo Credit: @ANI X)

நவம்பர் 29, டெல்லி (New Delhi): நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரானது (Parliament Winter Session) நவம்பர் 25ம் தேதி தொடங்கி, வரும் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் எனவும், 5 மசோதாக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தெரியவருகிறது. இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உட்பட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம். Chain Snatching: கணவருடன் சென்ற கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு.. பைக்கில் இருந்து விழுந்த தம்பதி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

குளிர்கால கூட்டம் தொடங்கியது முதலே, எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஆனால் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து மத்திய அமைச்சர்கள் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க தயங்குகின்றனா். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களவை இன்று பிற்பகல் வரையிலும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி டிசம்பர் 2 ஆம் தேதி தான் மாநிலங்களவை மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.