Principal Kills 6-Year-Old Girl: இந்தியாவே அதிர்ச்சி.. 6 வயது சிறுமி பலாத்கார முயற்சி & கொலை.. தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்..!

குஜராத் மாநிலம், தஹோட் மாவட்டத்தில் ஒன்றாவது வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியை இப்பள்ளி முதல்வர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்துள்ளார்.

Rape & Murder (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 24, தஹோட் (Gujarat News): குஜராத் மாநிலம், தஹோட் மாவட்டத்தில் உள்ள டோரனி என்ற கிராமத்தில் இருக்கும் பள்ளியில் 18 ஆண்டுகளாக பள்ளி முதல்வராக இருப்பவர் கோவிந்த் நாத். இவர் தினமும் பள்ளிக்கு காரில் வரும் போது வழியில் அதே பள்ளியில் ஒன்றாவது வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியை அழைத்து வந்து பள்ளியில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் இரண்டு தினத்திற்கு முன்பு வழக்கம்போல் சிறுமியை அவரது தாயார் கோவிந்த் நாத்துடன் காரில் அனுப்பி வைத்தார். ஆனால் பள்ளி முடிந்த பிறகு மாணவி வரவில்லை. இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் விசாரித்த போது மாணவியை தான் பள்ளியில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கு பின்புறம் மாணவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பள்ளி முதல்வர் கோவிந்த் நாத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரித்த போது, பள்ளியில் இருந்து தான் 5 மணிக்கு சென்றுவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரது மொபைல் போன் சிக்னல் மாலை 6.10 மணி வரை பள்ளியில் காட்டியுள்ளது. அதோடு மாணவி கோவிந்த் நாத் காரில் இருந்து இறங்கியதை யாரும் பார்க்கவில்லை. அன்று மாணவி வகுப்பிற்கும் வரவில்லை. Sexual Assault Case: 2 சிறுமிகளை சீரழித்த இளைஞர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை; இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் பள்ளி முதல்வரிடம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டனர். பின்னர் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். மாணவியை காரில் கோவிந்த் நாத் அழைத்து வரும் போது பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது மாணவி கூச்சலிட, பயந்து போன கோவிந்த் நாத் காரிலேயே மாணவியை மூச்சுத்திணறடித்து கொலை (Principal Kills Girl) செய்துள்ளார். பின் பள்ளிக்கு காரிலேயே மாணவியின் உடலை வைத்துவிட்டு சென்றுள்ளார். பள்ளி முடிந்த பிறகு மாணவியின் உடலை பள்ளிக்கு பின்புறம் போட்டுள்ளார். மாணவியின் பேக்கை அவள் படிக்கும் வகுப்புக்கு வெளியில் போட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement