Rail Ticket Reservation New Rule: ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு.. இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!
ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 120 நாட்களில் இருந்து 60-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அக்டோபர் 17, டெல்லி (Technology News): உலக அளவில் மிகவும் பழமையான ரயில் சேவைகளில் இந்தியன் ரயில்வேவும் ஒன்று. இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 2.3 கோடி பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரயில் கொண்டு சேர்க்கிறது. இந்தியன் ரயில்வேயை சுமார் 13 லட்சம் பணியாளர்கள் இயக்குகின்றனர். பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே, அதாவது 3 முதல் 4 மாதங்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட்டை முன்பதிவு செய்கின்றனர். ஏனெனில் இந்திய ரயில்வேயில் 120 நாட்கள் வரை பயணசீட்டு முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை இருந்தது. India Canada Diplomatic Tension: இந்தியா - கனடா உறவில் விரிசல்.. காரணம் என்ன?!
இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நாட்கள் 120லிருந்து 60ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 60 நாட்களுக்கு அப்பால் செய்யப்பட்டுள்ள முன்பதிவுகளை ரத்து செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு காலம் 365 நாட்கள் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த நடைமுறை வரும் நவம்பர் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது.