Sabarimala Online Booking: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. மகர விளக்கு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

Sabarimala (Photo Credit: Instagram)

அக்டோபர் 17, திருவனந்தபுரம் (Kerala News): கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் முருகன், ஐயப்பன் சுவாமிகளுக்கான காலமாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பழனி, திருச்செந்தூர், சபரிமலை ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் மாலையிட்டு, விரதம் இருந்து ஸ்வாமிகளை தரிசனம் செய்ய தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான சபரிமலை சீசன் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்க உள்ளது.

ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்: இந்நிலையில் சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. நாள் தோறும் 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்யாவிட்டாலும் சபரிமலைக்கு செல்லலாம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முன்பதிவு செய்யாவிட்டாலும், அனைவருக்கும் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு உள்ளது. Spurious Liquor: கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர் ஒருவர், விர்சுவல் கியூ சிஸ்டத்தில் (https://sabarimala.com/) பதிவு செய்து கொண்டு அவருக்கான தரிசனம் மற்றும் பிரசாதத்துக்கான டிக்கெட்டை சபரிமலை கோயிலின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலேயே ஆன்லைன் மூலமாக பெற முடியும். மேலும், பயணம் செய்ய விரும்பும் வழியையும் பக்தர்கள் இதன் மூலம் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது