SC On Citizenship Act: குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அக்டோபர் 17, திஸ்பூர் (Assam News): குடியுரிமை சட்டம் (Citizenship Act) 1955 இன் கீழ் உள்ள 6 ஏ சட்டப்பிரிவை அசாம் மாநிலத்தில் மட்டும் அமல்படுத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. பிரிவு 6 ஏவின் கீழ் 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1971 மார்ச் 25ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் மற்றும் அசாமில் வசிப்பவர்கள் தங்களை இந்திய குடிமக்களாக பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் வந்தது. அப்போது ஐந்து அரசியல் சாசன நீதிபதிகள் கொண்ட அமர்வில் நான்கு நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர். இதன் மூலம் 1966 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டுகளுக்கு இடையே வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. India Canada Diplomatic Tension: இந்தியா - கனடா உறவில் விரிசல்.. காரணம் என்ன?!
குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ: வங்காள தேசத்திலிருந்து அசாம் மாநிலத்திற்குள் அதிக அளவில் புலம் பெயர்ந்தோர் நுழைந்தனர். இதனை அசாம் மாணவர் சங்கம் கடுமையாக எதிர்த்து வந்தது. மாணவர்கள் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் போராடி வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசில் அப்போதிருந்த ராஜீவ் காந்தி அரசுக்கும் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் 1985 ஆம் ஆண்டு சட்டத்தில் பிரிவு 6 ஏ சேர்க்கப்பட்டது. அதாவது சட்டவிரோதமாக கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்திற்குள் குடிபெயர்ந்து பலர் வந்தனர். இதன் அடிப்படையில் யார் வெளிநாட்டினர் என்பதனை உறுதி செய்வதற்கே இந்த சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது.
தற்போது இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் இந்திய குடிமக்களாக அவர்கள் பதிவு செய்யக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய குடியுரிமை பெறுபவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடக்கும் தேர்தலில் வாக்களிக்க முடியாது. அதே நேரத்தில் 1971 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதிக்கு பின்னர் அசாம் மாநிலத்திற்குள் நுழைபவர்கள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.