Tirumala Tirupati Devasthanams announcement: புத்தாண்டில் திருப்பதிக்கு அனுமதி இல்லை.. திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு..!

திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tirupati (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 26, திருமலை (Thirumalai): திருப்பதியில் சொர்க்க வாசல் இலவச தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் டிக்கெட் இல்லாதவர்கள் ஜனவரி 1ஆம் தேதி வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசன டோக்கன்கள் ஜனவரி 2ம் தேதி முதல் வழங்கப்படும். தொடர் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வர ஆயத்தமாகும் பக்தர்கள், அதற்கு ஏற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளும்படி தேவஸ்தான தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Miracle Babies: 2 கருப்பை கொண்ட பெண்... 2 நாட்களில் 2 குழந்தைகள்...!

அதுமட்டுமின்றி வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியதன் காரணமாகவும், கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாகவும் ஏராளமானோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif