Indian Ocean Earthquake: இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையா?.!
இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
டிசம்பர் 29, இந்தியப் பெருங்கடல் (Indian Ocean): மாலத்தீவு அருகே உள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று காலை 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) குறிப்பிட்டுள்ளது.
மேலும் முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவிலும் கடலின் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 5.2, 5.8 மற்றும் 5.0 ஆக பதிவாகியுள்ளன என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Russian invasion of Ukraine ending in 2024: அமெரிக்கா-ரஷ்யா-இந்தியா தேர்தல்.. உக்ரைன் தலையெழுத்தை மாற்றப்போகும் தேர்தல்..!