Japan Earthquake (Photo Credit : @RksNews X)

நவம்பர் 09, டோக்கியோ (World News): உலகளவில் பெரிய அளவிலான உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பறித்தது. அதற்குப்பின், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, அவ்வப்போது பசுபிக் ரிம் என அழைக்கப்படும் பசுபிக் நெருப்பு வளையத்தின் மீது அமைந்துள்ள இந்தோனேஷியா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளில் 6.5 புள்ளிகளை கடந்து நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தன. Shocking Video: நடுரோட்டில் வைத்து மெக்சிகோ அதிபரை முத்தமிட முயன்ற போதை ஆசாமி.. அதிர்ச்சி சம்பவம்.!

சுனாமி எச்சரிக்கை (Japan Tsunami Warning):

இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சான்ரிகு கடலில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயம் தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சானே தகைச்சி சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரையிலிருந்து உடனடியாக மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் எனவும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான் பிரதமர்: