Tirupati Laddu Row: திருப்பதி லட்டு சர்ச்சை.. சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்..!
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திராவில் உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் புனித பிரசாதமான லட்டுகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுவாமியின் லட்டுகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கிடையே, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு லட்டு விற்கப்படுவது நடந்து வருகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பேரில் நடந்த ஆய்விலும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு மீது மிகப்பெரிய அளவில் அதிருப்தி எழுந்தது. இதையடுத்து, தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பியும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். UK Woman Recounts Sexual Trauma: ஆன்மீக பெயரில் பலாத்கார கொடுமை: இங்கிலாந்து இளம்பெண்ணுக்கு இந்தியாவில் துயரம்.. அதிர்ச்சி தரும் உண்மை.!
சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம்: இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவை கண்டித்தனா். திருப்பதி லட்டு செய்ய கலப்பட நெய் பயன்படுத்தியதாக சிறப்பு புலனாய்வு விசாரணை முடிவு வருவதற்கு முன்பே முதல்வர் சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் பேசியது ஏன்? முதல்வர் பதவியில் இருக்கும் நீங்கள் ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக பொதுவெளியில் பேசினீர்கள்? உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், அதை எப்படிப் பகிரங்கமாகச் சொல்ல முடியும்? அப்படி என்றால் விசாரணையின் நோக்கம் என்ன? அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என நீதிபதி கவாய் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.