Weather Report: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
மே 17 முதல் 19ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மே 16, சென்னை (Chennai): இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த 5 நாட்களுக்கு வடமேற்கு இந்தியா மற்றும் பீகாரில் வெப்ப அலை நிலைகள் ஏற்படக்கூடும். மே 18 முதல் கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் தொடங்கும். மே 16 முதல் 20 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, கர்நாடகாவின் தெற்கு உள்பகுதிகளில், கடலோர கர்நாடகத்தில் மே 7 முதல் 19 வரை, மே 16 ஆம் தேதி கடலோர ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா மற்றும் மே 19 முதல் 20 ஆம் தேதி வரை லட்சத்தீவுகள் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Safety Precautions During Rains: வெளுத்து வாங்கும் மழை.. நாம் மழையில் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் எவை?.!
மேலும் தென் தீபகற்பத்தில் மே 22 வரை கனமழை முதல் மிக கனமழையுடன் கூடிய ஈரமான காற்றழுத்தம் தொடர வாய்ப்புள்ளது. மே 16 முதல் 20 வரை தமிழகத்திலும், கேரளாவிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.