RAIN (Photo Credit: Pixabay)

மே 16, சென்னை (Chennai): தமிழகத்தில் தற்போது மழை தினமும் பெய்து வருகிறது. இதனால் தினசரி அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சலிப்பையும், சிரமத்தையும் ஏற்படுத்தும். ஆதலால் மழைக்காலத்தை எப்படி சமாளிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

மழையும் பாதுகாப்பும் :

~ மழை நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ரெயின்கோட் அணிந்து செல்லவேண்டும். அதற்காகவே வண்டியில் ஒரு இடம் வைத்துக் கொள்ளுங்கள்.

~ தற்போது கடைகளில் மடிகணினி பைகளுக்கும், பள்ளி கல்லூரி பைகளுக்கும் கூட மழை பாதுகாப்பு உறைகள் கிடைகின்றன அவைகளை பயன்படுத்தலாம். தொலைபேசிக்கு தண்ணீர் புகாத வண்ணம் டிரான்ட்ஸ்பரண்ட் கவர் வாங்கி உபயோகிக்கலாம். GV Prakash Kumar And Saindhavi Divorce: பிரிந்த பிறை தேடும் இரவிலே ஜோடி.. வெடித்த புரளிகள்.. கடுப்பான ஜி.வி. பிரகாஷ்..!

~ இரு சக்கர வாகனங்களை வெளியில் நிறுத்தும் போது, தண்ணீர் தேங்காத மேடான பகுதியா என பார்த்து நிறுத்தவும். வீடுகளில் வாகனங்களை நிறுத்தும் போது மழைத்தண்ணீர் விழாதவாறு நிறுத்தவேண்டும். இல்லையேல் வண்டிக்கான மழை பாதுகாப்பு உறை பயன்படுத்த வேண்டும்.

~ மழைநேரங்களில் தண்ணீரில் வழுக்கும்,சேற்றில் சிக்கும் செருப்புகளைத் தவிர்த்து, தண்ணீர் புகாத ஸூக்களைப் பயன்படுத்தலாம். இது சேற்றுப் புண் வராமலும் தடுக்கும். தோல் நோய் ஏற்படாமல் இருக்க வீட்டிற்கு வந்ததும் கால்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

~ சாலையோரங்களில் நடந்து செல்கையில் வடிகாலுக்காக திறந்த பாதாள சாக்கடை எதேனும் மூடாமல் இருக்கிறதா என்ற கவனத்துடன் நடக்க வேண்டும்.

~ அதேபோல், தெப்பமாக தண்ணீர் தேங்கி இருக்கும் பாதைகளில் செல்லவேண்டாம். சற்று கணுக்கால் அளவு தண்ணீர் இருந்தாலும் ஒரு முறை அது நடந்து செல்ல பாதுகாப்பானதா என உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் மழைக் காலங்களில் மின் இணைப்பு பாதிக்கப்படுவதால் மின்கம்ப சீர்திருத்தும் பணி ஆங்காங்கே நடைபெறும். அதனால் தண்ணீரில் கவனமாக கால் வைக்க வேண்டும்.

~ மேலும் பாதுகாப்பிற்காக எப்போதும் சிறிய டார்ச் லைட், பவர்சேவர் வைத்திருப்பது நல்லது.