Odisha Train Accident: சீரமைப்பு பணிகள் நிறைவு; விபத்து நடந்த பகுதியை கடந்து செல்லும் பயணிகள் இரயில்.. திக்., திக்., தருணங்கள்.!

இன்று சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று, இரயில்கள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Visuals from Spot (Photo Credit: ANI)

ஜூன் 05 , பாலசோர் (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டம், பாஹனஹா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி பயணித்த கோரமண்டல் அதிவிரைவு இரயில் சரக்கு இரயில் மீது மோதி பயங்கர விபத்திற்குள்ளாகியது. சில நிமிடங்களில் அதே வழித்தடத்தில் வந்த பெங்களூர் - ஹவுரா துரந்தோ இரயிலும் விபத்திற்குள்ளாகிய இரயில் மீது மோதியது.

இந்த விபத்தில் கோரமண்டல் அதிவிரைவு இரயில் பயங்கர விபத்தை சந்தித்ததால், அதில் பல்வேறு கனவுகளுடன் சென்னை நோக்கி பயணித்த 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 900 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கு பின்னர் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று, மீண்டும் இரயில் சேவையை இயக்க தீவிர களப்பணி நடந்து வந்தது. Prevention of Train Accident: இரயில் விபத்துகளை தவிர்க்கும் அசத்தல் தொழில்நுட்பங்கள்; அசரவைக்கும் தகவல்கள் இதோ.!

முதற்கட்ட விசாரணையில் விபத்துக்கு சிக்னல் கோளாறு மற்றும் மனித அலட்சியமே காரணம் என்பது உறுதியாகியுள்ளதால், எதிர்காலத்தில் இவ்வகை விபத்துகளை தடுக்க வேண்டிய நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகியுள்ளது. விபத்து குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மத்திய இரயில்வே அமைச்சர் சி.பி.ஐ-க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 2 நாட்களாகவே விபத்து நடத்த இடத்தில் முகாமிட்டு இருந்த மத்திய இரயில்வே அமைச்சர், நேற்று இரவு தொடர் 51 மணிநேர சீரமைப்பு பணிகளுக்கு பின்பு சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதும், அவ்வழித்தடத்தில் சரக்கு இரயிலை பயணிக்க அனுமதித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று பயணிகள் இரயில் சேவையும் தொடங்கியுள்ளது.