Nayab Saini on Vinesh Phogat: "தங்கம் வெல்லவில்லை என்றாலும் அவள் எங்களின் தங்கமகளே!" - வினேஷ் போகத்துக்கு உரிய மரியாதை; ஹரியானா அரசு அதிரடி.!
ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும், அவர் எங்களின் தங்க மகள் என்பதால் அவர் பதக்கம் வென்றவராக கௌரவிக்கப்பட்டு, அவருக்கான அரசு மரியாதை வழங்கப்படும் என சைனி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 08, சண்டிகர் (Haryana News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympics 2024) போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா தற்போது வரை 10 மீட்டர் அளவிலான ஏர் ரைபிள், 50 மீட்டர் அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 3 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 50 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat) இறுதிப்போட்டி வரை சென்று இருந்தார். Vinesh Phogat Retirement: "போராட சக்தி இல்லை" - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு.!
விதிமுறையை மீற முடியாது:
இதனால் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவர் 100 கிராம் எடை அதிகம் இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியாவின் வெள்ளி அல்லது தங்கப்பதக்க கனவு தவிடுபிடியான நிலையில், இந்திய மல்யுத்த வீரர் சம்மேளனம் ஒலிம்பிக்கில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. அதேவேளையில், சர்வதேச மல்யுத்த சம்மேளனம் 100 கிராம் எடைதான் என சலுகை வழங்கினால், ஒவ்வொருவருக்கும் சலுகை வேண்டியிருக்கும். விதிமுறைகளை மீற இயலாது என கூறிவிட்டது.
ஹரியானா முதல்வர் அறிவிப்பு:
இந்நிலையில், அம்மாநில முதல்வர் நயுப் சைனி (Nayub Saini), ஹரியானா மாநில அரசு வினேஷ் போகத்துக்கு பதக்கம் வென்றவருக்கான மரியாதையை கொடுத்து வரவேற்கும். அவருக்கு அரசு சார்பில் உரிய மரியாதையை அனைத்தும் வழங்கப்படும். பதக்கம் அவர் வெல்லவில்லை என்றாலும், அவருக்கு பதக்கம் வென்றவருக்கான மரியாதை அப்படியே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.