Haryana Election Results 2024: ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக? 50 தொகுதிகளில் முன்னிலை.!
காலை 10 மணி நிலவரம் இது ஆகும்.
அக்டோபர் 08, புதுடெல்லி (New Delhi): ஹரியானா (Haryana Assembly Poll Results 2024) மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில், மாநிலங்களவை தேர்தல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. அக்.08ம் தேதியான இன்று இரண்டு மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக - காங்கிரஸ் (BJP Vs Congress) கட்சிகளிடையே கடும் போட்டித்தன்மையை ஏற்படுத்திய இரண்டு மாநில தேர்தலிலும், கருத்துக்கணிப்புகளின்படி ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றலாம், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறி நீடிக்கும் எனவும் தெரியவந்தது. Assembly Election Results 2024: ஜம்மு காஷ்மீர் & ஹரியானா மாநிலத்தில் ஆட்சி யார் வசம்? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. பரபரப்பாகும் தேர்தல்களம்.. விபரம் உள்ளே.!
போட்டா-போட்டி முடிவுகள்:
இதனால் தேசிய அளவில் 5 மாநிலங்களில் மொத்தமாக தனது ஆட்சி அமையும் என காங்கிரஸ் எதிர்பார்த்து காத்திருந்தது. இதனிடையே, இன்று காலை முதலாக ஹரியானா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டு மாநில தேர்தல் முடிவுகளையும் கண்டபோது, காங்கிரஸ் தொண்டர்களுக்கு காலை 10 மணிவரை இரண்டு மாநிலமும் காங்கிரஸ் ஆட்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, ஹரியானா மாநிலத்தில் தற்போது பாஜக முன்னிலையில் இருக்கிறது.
பாஜக ஹரியானாவில் முன்னிலை:
அங்குள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் என்ற நிலையில், காலை 10 மணி நிலவரப்படி பாஜக 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, இண்டியா கூட்டணி 33 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதேவேளையில், ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரையில் அறுதிப்பெரும்பான்மை பெற வேண்டிய இடங்களை தாண்டி இண்டியா கூட்டணி 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, பாஜக 24 தொகுதிகளிலும், ஜெ.கே.பி.டி.பி 4 தொகுதிகளிலும், எஞ்சியவை 10 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் 12 முதல் 1 மணிக்கு மேல் முன்னிலையில் இருக்கும் கட்சிகளே ஆட்சியை பிடிக்கும் என்பதால், மதியம் வரை இரண்டு கட்சியினருக்கும் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.