PM Modi on 18th Parliament Session: "இந்திய ஜனநாயகத்திற்கே புதிய தொடக்கம்".. அவசரநிலை பிரகடனம் இந்தியாவின் கருப்பு நாள் - பிரதமர் நரேந்திர மோடி..!
மூன்றாவது முறையாக எமது அரசை தேர்வு செய்த மக்களுக்காக இந்த அரசு செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜூன் 24 , புதுடெல்லி (New Delhi): 18 வது மக்களவை பொதுத்தேர்தல் நிறைவுபெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியாவின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இன்று மக்களவை கூட்டத்தொடர் (Parliament Session 2024) தொடங்கியுள்ளது. இடைக்கால மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள பர்த்ரூஹரி மஹதாப், இன்றும், நாளையும் மக்களவை (Parliament Session 2024) கூட்டத்தொடரில், மக்களை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மக்களை உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான நாள்:
18 வது மக்களவை கூட்டத்தொடர் நிகழ்ச்சிக்கு முன்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "புதிய அளவிலான உத்வேகம், மக்களுக்கு உழைக்கும் உத்வேகத்துடன் பணிகளை தொடங்கிய வேண்டிய நிகழ்வுகள் நம்முன் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய தேர்தலை, மிகுந்த பெருமைக்குறிக்குரிய வகையில் நிறைவு செய்துள்ளோம். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் ஆகும். நாடாளுமன்ற அரசியல் நாளில், இன்றைய நாள் முக்கியமானது, பெருமைமிக்கது. Kagiso Rabada, Marco Jansen: கேட்ச் பிடிப்பதில் வேகம்.. பவுண்டரில் லைனில் அந்தரத்தில் மோதிக்கொண்ட வீரர்கள்; வெஸ்ட் இண்டீஸ் - தென்னாபிரிக்கா அணிகள் ஆட்டத்தில் சுவாரஷ்யம்.!
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அவை:
சுதந்திரத்திற்கு பின் புதிய நாடாளுமன்றத்தில் புதிய எம்பிகளுடன் அவை என்பது கூடுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் புதிய எம்.பிக்களுக்கு எனது வாழ்த்துக்களை நான் கூறுகிறேன். 140 கோடி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் உழைப்பை நாங்கள் முழுமையாக தருவோம். கடமை, செயல்பாடு, கருணை என எமது ஆட்சி சிறப்பிக்க நடைபெறும். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் சாதாரண மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இருக்கும்.
விவாதங்கள் வேண்டும், எதிர்க்கட்சிகளின் முழக்கம் வேண்டாம்:
சுதந்திரத்திற்கு பின் 75 ஆண்டுகால இந்தியா வரலாற்றில், மூன்றாவது முறை தொடர்ந்து மக்கள் நமது ஆட்சியை தேர்வு செய்துள்ளது நாடாளுமன்றத்திற்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்கி இருக்கிறது. 18 வது நாடாளுமன்றம் இந்திய ஜனநாயகத்துக்கு புதிய அதிஷ்டத்தை கொண்டு வரும். ஜூன் 25 அவசர நிலை பிரகடனப்படுத்தியது இந்தியாவின் கருப்பு நாள் ஆகும். அதன் 50 வது தினம் நாளை வருகிறது. மக்களுக்காக 3 வது முறையாக தேர்வு செய்யப்பட்ட நாங்கள் 3 மடங்கு உழைப்பை வெளிப்படுத்துவோம். வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை எட்ட செயலாற்ற ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் மட்டுமே மக்கள் விருப்பமாக உள்ளது. முழக்கங்களை அவர்கள் எதிர்பார்க்கவில்லை" என கூறினார்.